சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாசன திட்ட குளங்களில் நீர்மட்டம் சரிவு: விவசாயிகள் அதிர்ச்சி

Added : ஆக 03, 2019
Advertisement
 பாசன திட்ட குளங்களில் நீர்மட்டம் சரிவு: விவசாயிகள் அதிர்ச்சி

உடுமலை:பருவமழை போதியளவு பெய்யாத நிலையில், பாசன திட்ட குளங்களில், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியில், தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யாத நிலையில், வறட்சி துவங்கியுள்ளது. வறட்சியாக வீசும் பலத்த காற்றினால், விளைநிலங்களில், ஈரப்பதம் முற்றிலுமாக குறைந்து, தென்னை சாகுபடி பாதித்து வருகிறது.
நீர்மட்டம் சரிவுஏழு குள பாசன திட்ட குளங்களின் மூலம் நேரடியாக, இரண்டு ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. சுற்றுப்பகுதியிலுள்ள, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக, இக்குளங்கள் உள்ளன. திருமூர்த்தி அணையிலிருந்து, அரசாணை அடிப்படையில், இக்குளங்களுக்கு, தளி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், உடுமலை பகுதியில், பருவமழை பெய்யாமல், வறட்சி துவங்கியுள்ள நிலையில், குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதில், 404 ஏக்கர் நீர்த்தேக்க பரப்புள்ள பெரியகுளத்திலும் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், கரும்பு உட்பட சாகுபடிகளை மேற்கொண்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X