சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவரை, எரித்து, கொன்ற மனைவி

Added : ஆக 03, 2019
Advertisement

திண்டிவனம்:நடத்தையில் சந்தேகப்பட்டதால், கணவரை, தீ வைத்து எரித்து, கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், டி.வி.நகரைச் சேர்ந்த, தட்சிணாமூர்த்தி, மாரியம்மாள் தம்பதியின் வளர்ப்பு மகன், சேதுபதி, 19. இவர், கடந்த மாதம், 13ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த, முருகவேணி, 19, என்பவரை, காதலித்து, திருமணம் செய்தார்.

இதற்கு, தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சேதுபதி, முருகவேணி மற்றும் மாமியார், குமுதா ஆகியோர், அதே பகுதியில், ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, சேதுபதி துாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென, குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதில் சேதுபதி, உடல் கருகி இறந்தார்.

திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தினர். குடிசை வீட்டின் முன்பக்க கதவு, வெளிப்பக்க மாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது, சந்கேத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து, சேதுபதியின் மனைவி, முருகவேணியிடம் விசாரணை நடத்தியபோது, அவர், முன்னுபின் முரணாக பதில் அளித்தார்.போலீசாரின், 'கிடுக்கிபிடி' விசாரணையில், முருகவேணி, தன் கணவரை கொலை செய்தது, தெரிய வந்தது.

முருவேணி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:

திருமணமானது முதல், சேதுபதி, என் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து, அடிக்கடி, ஆபாசமாக பேசி, திட்டினார். இதனால், எங்களுக்குள், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும், மது போதையில் வந்தவர், என் நடத்தையைப் பற்றி, ஆபாசமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், சேதுபதி துாங்கியதும், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டினேன்; பின், கூரையில், மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்தேன்.இவ்வாறு அவர், வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, முருகவேணியை கைது செய்த போலீசார், அவரை, திண்டிவனம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X