சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஓட்டுனரின் அவசரம் ரயில்வே கேட், 'டமால்'

Added : ஆக 03, 2019
Advertisement
 பஸ் ஓட்டுனரின் அவசரம் ரயில்வே கேட், 'டமால்'

வேலுார்:வேகமாக வந்த பஸ் மோதியதால், ரயில்வே கேட் உடைந்தது. இதனால், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து, நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

வேலுார், கன்டோன்மென்ட் வசந்தபுரம் ரயில்வே கேட்டை, நேற்று காலை, 7:50 மணிக்கு, மூடிக் கொண்டிருந்தனர்.அப்போது, 'கார்த்திக் சவுண்ட் சர்வீஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான, 'பவர் ஜெனரேட்டர்' பஸ்சை ஓட்டி வந்த, ஓட்டுனர், மனோகரன், 45, ரயில்வே கேட் மூடுவதற்குள், கடந்து விடலாம் என, வேகமாக சென்றார்.அப்போது, வாகனம் மோதியதில், ரயில்வே கேட் உடைந்தது.

தகவலறிந்து வந்த, ரயில்வே அதிகாரிகள், போராடி, ரயில்வே கேட்டை சரி செய்தனர்.இதனால், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து, நான்கு மணி நேரம் பாதிக்கப்பட்டது. காட்பாடி ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X