இந்தியா

58 பழமையான சட்டங்களை நீக்குவதற்கு பார்லி.,ஒப்புதல்

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, இரண்டாவது, தே.ஜ., கூட்டணி அரசு, பார்லிமென்டின் முதல் கூட்டத் தொடரிலேயே, பல மசோதாக்களை தாக்கல் செய்து, நிறைவேற்றி வருகிறது.அந்த வகையில், மக்களுக்கு பயன்படாமல் இருக்கும், 58 பழமையான சட்டங்களை நீக்குவதற்கான மசோதா, கடந்த, 29ல், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 'நீக்குதல் மற்றும் திருத்தம் மசோதா, 2019-ஐ'
58 பழமையான சட்டங்களை நீக்க ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான, இரண்டாவது, தே.ஜ., கூட்டணி அரசு, பார்லிமென்டின் முதல் கூட்டத் தொடரிலேயே, பல மசோதாக்களை தாக்கல் செய்து, நிறைவேற்றி வருகிறது.
அந்த வகையில், மக்களுக்கு பயன்படாமல் இருக்கும், 58 பழமையான சட்டங்களை நீக்குவதற்கான மசோதா, கடந்த, 29ல், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 'நீக்குதல் மற்றும் திருத்தம் மசோதா, 2019-ஐ' ராஜ்யசபாவில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நேற்று தாக்கல் செய்தர்.


latest tamil news


அவர் பேசுகையில், ''பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், இதுவரை, 1,428 பழைய மற்றும் வழக்ககொழிந்த சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இப்போது, 58 பழைய சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை, தாக்கல் செய்துள்ளோம். இதில், பெரும்பலான சட்டங்கள், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை,'' என்றார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, பல கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேசினர். பின், குரல் ஓட்டெடுப்பு மூலம், மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா, பார்,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-201916:30:39 IST Report Abuse
நக்கல் அரசாங்கங்களில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில்தான் படிக்கவேண்டும், இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டும்... அதேபோல், அரசாங்கத்தில் இருப்பவர்களோ அல்லது அவர் குடும்பங்களில் இருப்பவர்களோ தொலைக்காட்சி, பத்திரிக்கை, பள்ளி, கல்லூரி போன்றவைகள் வைத்திருக்கக்கூடாது என்ற சட்டங்கள் வரவேண்டும்...
Rate this:
Cancel
chells - trichy,இந்தியா
03-ஆக-201912:04:53 IST Report Abuse
chells ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்தை பறிமுதல் செய்வதோடு இல்லாமல் அவர்களின் வாரிசுகள் எந்தவித சலுகையும் பெற முடியாது மற்றும் அரசு வேலை பெற முடியாது என்பதை சட்டம் ஆக்குங்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-ஆக-201910:20:55 IST Report Abuse
Natarajan Ramanathan ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வந்த நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறையையும் உடனே நீக்குங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X