பதிவு செய்த நாள் :
ஜம்மு, பதற்றம், புல்வாமா தாக்குதல், துணை ராணுவப் படை,குவிப்பு

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை உள்ளது. 'மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்கு பாதகம் வராது' என, கவர்னர், சத்யபால் மாலிக் உறுதி அளித்து உள்ளார். ஆனால், 'எல்லாம் மர்மமாக உள்ளது' என, முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லா புலம்பியுள்ளார். 'உண்மை நிலவரம் குறித்து, பார்லிமென்டில் அறிக்கை வெளியிட வேண்டும்' என, காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. மாநிலத்தின் பாதுகாப்புக்காக, கூடுதலாக, 10 ஆயிரம் துணை ராணுவப் படையினர் சமீபத்தில் அனுப்பப்பட்டனர். இதையடுத்து, மேலும், 25 ஆயிரம் வீரர்கள் அனுப்பப்பட உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், முன்னாள் முதல்வர், ஒமர் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சியினர், கவர்னர், சத்ய பால் மாலிக்கை, நேற்று காலை சந்தித்து பேசினர்.

ஆயுதங்கள்

அதன்பின், கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அமர்நாத் யாத்திரை பாதையில், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், எல்லைப் பகுதியிலும், பாக்., ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்தே, பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்தில், கூடுதல் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கருதியே, அமர்நாத் யாத்திரையை நிறுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. 'மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 35ஏ மற்றும் 370வது பிரிவுகள் நீக்கப்பட உள்ளன; அதற்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது' என்று கூறப்படுவதில் உண்மையில்லை.
அதுபோன்ற எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. சிறப்பு அந்தஸ்துக்கு எந்த பாதகமும் வராது. சம்பந்தம்


இல்லாமல், இரண்டு விஷயங்களையும் தொடர்புபடுத்தி, பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். யாரும் கவலைபட வேண்டாம், பயப் படவும் வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை, ஒமர் அப்துல்லா ஏற்க மறுத்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி: முயற்சி ஏதும் இல்லை கவர்னரை சந்தித்தோம். மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவுகள் நீக்கப்படாது; மாநிலத்தை பிரிக்கும் முயற்சி ஏதும் இல்லை என்று கூறினார். ஆனால், நடக்கும் விஷயங்கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன. இது தொடர்பாக, மத்திய அரசு உண்மை நிலவரத்தை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
பார்லி.,யில் இது தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்துவோம். மேலும், கூடுதல் வீரர்கள் அனுப்பியது தொடர்பாக, மாநிலத்தில் தற்போதைய நிலைமை குறித்தும், மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். காங்., மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத், டில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமர்நாத் யாத்திரையை நிறுத்தியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தபோதும், இதற்கு முன், யாத்திரையை ரத்து செய்ததோ, நிறுத்தியதோ இல்லை.
புல்வாமா தாக்குதலைத் தவிர, இந்தாண்டு, ஜம்மு - காஷ்மீரில் குறைந்த அளவுக்கே, பயங்கரவாத


சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், கூடுதல் படைகள் அனுப்ப வேண்டிய அவசியம். இது தொடர்பாக, பார்லி.,யின் இரு அவைகளிலும், பிரதமர் மோடி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இது அவருடைய கடமை. இவ்வாறு, அவர் கூறினார். மாநில மக்களிடையே ஒரு அச்ச உணர்வை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது,

ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவரான, பயங்கரவாதி, மசூத் அசாரின் சகோதரர், இப்ராஹிம் அசார், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு வந்துள்ளார் என, உளவுத் துறை தெரிவித்ததாக, செய்திகள் வெளியாகின. மேலும், பாக்.,கில் பயிற்சி பெற்ற, இந்த அமைப்பைச்சேர்ந்த, 15 பேரும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் காத்திருப்பதாகவும், நமது நாட்டுக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம், சோபுரில், பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு கட்டடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையின் பதிலடியில், இரண்டு பயங்கரவாதிகள்


கொல்லப்பட்டனர். இதே போல, சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கர வாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதி களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக, என்.ஐ.டி., எனப்படும், தேசிய தொழில்நுட்ப மையம் கூறியுள்ளது. ஜம்மு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், இதை, மாவட்ட கலெக்டர், ஷாஹித் இக்பால் சவுத்ரி மறுத்துள்ளார். 'கல்வி நிறுவனங்களை மூடும்படி, எந்த உத்தரவும் பிறப்பிக்க,வில்லை.

மாவட்டத்தில் உள்ள, 900க்கும் மேற்பட்ட பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன' என, சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், கலெக்டர் கூறியுள்ளார்.

'மச்சைல்' யாத்திரையும் ரத்து

பாதுகாப்பு காரணங்களுக்காக, அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், புகழ்பெற்ற, 43 நாள், 'மச்சைல்' யாத்திரையையும், நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள, பத்தார் பள்ளத்தாக்கு பகுதியில், மச்சைல் கிராமத்தில் உள்ள துர்க்கை கோவிலுக்கு, 30 கி.மீ., மலைப்பாதை வழியாக ஆண்டுதோறும், 43 நாட்களுக்கு யாத்திரை நடக்கும். இந்தாண்டு யாத்திரை, ஜூலை, 25ல் துவங்கியது. செப்., 5 வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இந்த யாத்திரையையும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Elangovan - Thiruvarur,இந்தியா
04-ஆக-201921:26:17 IST Report Abuse

R Elangovanசிறப்பு அந்தஸ்து முதலில் ரத்து செய்ய வேண்டும் அதனால் வந்த (நேரு செய்த) வினைதான் ஜம்மு காஷ்மீர் (மாநிலத்தில் காஷ்மீர் மற்ற இரண்டு மாநிலங்களை விட பரப்பளவில் குறைவாக இருக்க வேண்டும் இது மிக முக்கியமாக இருக்க வேண்டும்) மூன்றாக பிரிக்கப்பட்டால் பாதி தீவிரவாதம் ஒழிந்து போகும் ராணுவ செலவும் குறையும் நம் நாட்டின் ஒட்டு மொத்த பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் ஜம்மு காஷ்மீர் சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது. இந்த நிலை தொடரக்கூடாது. தொடர்ந்தால் இந்திய வளர்சிக்கு பாதுகாப்புக்கும் வரும் காலத்தில் பெரும் சறுக்களையும் பின்னடைவையும் ஏற்படுத்தும்.

Rate this:
Projectsatbangalore - Kovai,இந்தியா
04-ஆக-201921:20:31 IST Report Abuse

ProjectsatbangaloreGood

Rate this:
மதுரை வாசு - மதுரை மாநகர்,இந்தியா
04-ஆக-201920:29:47 IST Report Abuse

மதுரை வாசுபுல்வாமா தாக்குதலைத் தவிர, இந்தாண்டு, ஜம்மு - காஷ்மீரில் குறைந்த அளவுக்கே, பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன-காங்., மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத் உனக்கு வேணா குறைந்த அளவா இருக்கலாம் ஆனால் எங்களை போன்ற தேசபக்தர்களுக்கு அந்த குறைந்த அளவு கூட இருக்க கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் காஷ்மீரில் வன்முறை குறையவில்லைனு நீயும் உங்க பப்புவும் ஊர்ஊரா போயி கத்துனீங்க... இப்ப மட்டும் குறைந்த அளவா? அடி பலமா விழுதா? இந்த பயம் உன்னை போன்றவர்களுக்கு எப்பவும் இருக்கணும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X