பதிவு செய்த நாள் :
பா.ஜ., எம்.பி.,க்களுக்கு
2 நாள் ஒழுக்க பயிற்சி

புதுடில்லி: பா.ஜ.,வைச் சேர்ந்த, எம்.பி.,க்களுக்கான, இரண்டு நாள் ஒழுக்கப் பயிற்சி நேற்று துவங்கியது. அனைத்து, எம்.பி.,க்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மிகப் பெரிய வெற்றி பெற்று, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ



இந்நிலையில், சில, எம்.பி.,க்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது, பொது இடத்தில், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது, பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.

உத்தரவுஇதையடுத்து, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு, இரண்டு நாள் ஒழுக்கப் பயிற்சி நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது; அனைவரும், பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருநத்து.

அதன்படி, 'அப்யாஸ் வர்க்கா' எனப்படும், இந்த ஒழுக்கப் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. பிரதமர், நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர், அமித் ஷா, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், கட்சியின் செயல் தலைவர், ஜே.பி.நட்டா ஆகியோர், எம்.பி.,க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பேசுகின்றனர்.

இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: முதல் முறையாக, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டோர்,மற்ற கட்சிகளில் இருந்து வந்தோர் ஆகியோருக்கு, கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கப்படுகிறது.

அவப்பெயர்

சிலர், சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து, கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர். சில, எம்.பி.,க்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் நடவடிக்கைகள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
அதனால் தான், இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், எம்.பி.,க்கள் எப்படி செயல்பட வேண்டும், ஒழுக்கத்துடன் இருப்பது எப்படி, பார்லி.,யில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, பல்வேறு விஷயங்கள் குறித்து, விளக்கப்படுகிறது. அமைச்சர்கள் பலர், பார்லி.,க்கு வராமல் இருப்பது தொடர்பாக, பிரதமர் மோடி சமீபத்தில், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பார்லி., கூட்டத் தொடர் நடக்கும்போது, பார்லி.,க்கு வர வேண்டும் என, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். தற்போது, எம்.பி.,க் களுக்கு பாடம் எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement



எப்போதும் தொண்டர்


பா.ஜ., என்பது தானாக உருவான கட்சி; உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. ஒரு குடும்பத்தின் பாரம்பரியமாக இல்லாமல், பா.ஜ.,வின் கொள்கைகளும், எண்ணங்களும் தான், நம் கட்சியை தற்போதைய நிலைக்கு உயர்த்தி உள்ளன. பா.ஜ.,வில் உள்ளவர்கள், எம்.பி.,யாகவோ அல்லது அமைச்சராகவோ பதவி பெற்றாலும், உங்களுக்குள் இருக்கும் கட்சி தொண்டர் என்ற உணர்வு, உயிர்துடிப்புடன் இருக்க வேண்டும். கற்பதற்கு வயது வித்தியாசமில்லை; எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற மாணவர் நிலையில் இருக்க வேண்டும்.பிரதமர் மோடி

எம்.பி.,க்களுடன் அமர்ந்த மோடி

பா.ஜ., - எம்.பி.,க்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்ற, பிரதமர் மோடி,மேடையில் அமராமல், மற்ற, எம்.பி.,க்களுடன் கீழ் வரிசையில் அமர்ந்திருந்தார். மத்திய அமைச்சர்கள் பலரும், கீழ் வரிசையில் அமர்ந்திருந்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
07-ஆக-201915:05:26 IST Report Abuse

skv srinivasankrishnaveniகண்டவாலும் பிஜேபி லே நின்னால் பிஜேபி பெரு தான் நாசமாப்போவும் சுயஒழுக்கம் இல்லாதவன் குடிகாரனெல்லாம் தேவையே இல்லீங்க உன்னாவ் போல MLA வாழ் பிஜேபிக்கே கெட்டபேறுதான்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஆக-201923:37:53 IST Report Abuse

Pugazh Vஎதை? ஜொள்ளு ஒழுக்க பயிற்சி யா? இதில் தான், சென்கார் முதல் பல தல கள் கைதேர்ந்த வர்களாச்சே.

Rate this:
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-201920:44:53 IST Report Abuse

rajesh என்னது ஒழுக்க பயிற்சியா?????

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X