கீழ்பூனாஞ்சியில் பழங்குடியினருக்கு மர்மக்காய்ச்சல்: சுகாதார பணியில் நகராட்சி கவனம்

Added : ஆக 04, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறை அருகே மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில், நகராட்சி சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கீழ்பூனாஞ்சி மரப்பாலம் பழங்குடியினர் செட்டில்மென்ட் பகுதி. இங்கு வசிக்கும், பழங்குடியினருக்கு மர்மக்காய்சல் பாதிப்பு ஏற்பட்டது.இதையடுத்து, கோவை மாவட்ட நடமாடும் மருத்துவக்குழு டாக்டர் பரணிதரன், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவஅலுவலர் பாபுலட்சுமணன் ஆகியோர் தலைமையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பழங்குடினயினருக்கு ரத்தபரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தொண்டை அடைப்பான் நோய் அறிகுறி உள்ளதா என்று டாக்டர்கள் பரிசோதித்தனர்.பரிசோதனையில், யாருக்கும் மர்மக்காய்ச்சல் இல்லை, சாதாரண காய்ச்சல் தான் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் காடம்பாறை பகுதியில் உள்ள மூன்று செட்டில்மென்ட் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.

இதனிடையே, வால்பாறை நகராட்சி கமிஷனர் (பொ) சரவணபாபு தலைமையில், துப்புரவு பணியாளர்கள் செட்டில்மென்ட் பகுதியில் கொசு மருந்து தெளித்தனர்; பிளீச்சிங் பவுடர் துாவினர். குடியிருப்புகளை சுற்றிலும் வளர்ந்திருந்த செடி, கொடி மற்றும் புதரை அகற்றி சுத்தம் செய்தனர்.


பஸ் ஊழியர்கள் மீது புகார்



தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பரமசிவம் கூறியதாவது:கீழ்பூனாஞ்சி மரப் பாலம் செட்டில்மென்ட் பழங்குடியினர் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பால் அவதிப்படு கின்றனர்.காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள மூன்று பேர், கோட்டூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக நேற்று காலை, 9:30 மணிக்கு பஸ்சிற்காக காத்திருந்தனர். காடம்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி, பழங்குடியினரை ஏற்றவில்லை. சம்பந்தப்பட்ட அரசு பஸ் டிவைரர் மற்றும் நடத்துனர் மீதுநடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X