ராகுலால் பிரச்னை

Updated : ஆக 04, 2019 | Added : ஆக 04, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
டில்லி உஷ்,ராகுல்,சித்தார்த்தா, கிருஷ்ணா

டில்லியில், அரசு பங்களாவில் வசிக்கிறார், காங்., தலைவர் ராகுல். இவரது வீடு, துக்ளக் லேனில் உள்ளது. பிரதமருக்கும் அவரது குடும்பத்தாருக் கும் வழங்கப்படும் சிறப்பு பாதுகாப்பு, ராகுலுக்கு தரப்படுகிறது. ராகுல் வெளியே செல்லும் போதெல்லாம், துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படை வீரர்களுடன், மொபைல் போன், 'சிக்னலை' செயல் இழக்கச் செய்யும், 'ஜாமர்' வாகனமும் உடன் செல்லும். ராகுல் வீட்டில் இருக்கும் போதும், இந்த ஜாமர் பயன்படுத்தப்படுகிறது. துக்ளக் லேனில் ஐந்துக்கும் மேற்பட்ட பங்களாக்கள் உள்ளன. இதில், சீனியர், எம்.பி.,க்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். சமீப காலமாக, இவர்களுக்கு பெரும் பிரச்னை. பாதி நேரம் இவர்களுடைய மொபைல் போன்கள் வேலை செய்வதில்லை. காரணம், ராகுல் பாதுகாப்பு படை வீரர்கள் ஜாமர்களை பயன்படுத்துவது தான்.இதனால், இந்த, எம்.பி.,க்களின் குடும்பத்தினருக்கு வெளியேயிருந்தும் போன் வருவதில்லை; இவர்களாலும், மற்றவர்களிடம் போனில் பேச முடிவதில்லை. இந்த பிரச்னை குறித்து, தொலைத்தொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத்திடம், எம்.பி.,க்கள் முறையிட்டனர். 'இது, பாதுகாப்பு தொடர்பான விவகாரம்; தலையிட முடியாது' என, அமைச்சர் கை விரித்துவிட்டார். பிரச்னையை எப்படி தீர்ப்பது என, வழி தெரியாமல் திண்டாடுகின்றனர் இந்த, எம்.பி.,க்கள். இவர்களுடைய குடும்பத்தினரோ, வீட்டை மாற்றுங்கள், வேறு இடத்திற்கு போய்விடலாம் என, எம்.பி.,க் களிடம் நச்சரித்து வருகின்றனர்.


தமிழக எம்.பி.,யின் பாசம்தமிழகத்தை சேர்ந்த, அந்த எதிர்க்கட்சி, எம்.பி., -மத்தியில் ஆளும், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வருபவர். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம், பிரதமர் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர். இப்போது, பார்லிமென்டிலும், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.சபையில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், 23 வருடங்களுக்குப் பின், மீண்டும் சபைக்கு வந்துள்ளேன் என சொல்லி, பேச வாய்ப்பு வாங்கி விடுகிறார். ஒரு பக்கம், பா.ஜ.,வை எதிர்த்து விட்டு, மறுபக்கம், பா.ஜ., அமைச்சர்களை சந்தித்து உதவி கேட்பது தான் இடிக்கிறது. ஒரு அமைச்சரிடம், என் சொந்த ஊரில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கோபுரம் கட்டுகிறேன் என, கூறியிருக்கிறார். 'நீங்கள் பெரியார் வழி வந்தவராயிற்றே; கோவிலுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்' என, அமைச்சர் கேட்க, அந்த, எம்.பி., பதில் சொல்லாமல் சிரித்திருக்கிறார். இந்த, எம்.பி., பட்ஜெட் கூட்டத்தொடரில், படு பிசியாக உள்ள ஒரு அமைச்சரை சந்தித்து, 'என் மனைவி உங்கள் ரசிகை; நீங்கள் எப்போது, 'டிவி'யில் பேசினாலும் உன்னிப்பாக கவனிப்பாள்; நாங்கள் இருவரும் உங்களை சந்திக்க வேண்டும்; நேரம் ஒதுக்குங்கள்' என, வேண்டிக் கொண்டார். அந்த அமைச்சரோ, பார்லிமென்டில் பல விஷயங்களுக்கு பதில் சொல்ல வேண்டிஇருக்கிறது; இன்று முடியாது என, சொல்லிஇருக்கிறார். ஆனால், அந்த எம்.பி., விடவில்லை. எப்போது நேரம் ஒதுக்கினாலும் வருகிறோம் என, பிடிவாதம் காட்ட, இரவு, 9:00 மணிக்கு கணவன், மனைவி இருவரையும், வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சர். வழக்கமாக அந்த அமைச்சர், அரசியல்வாதிகளை தன் அலுவலகத்தில் தான் சந்திப்பார். யாரையும் வீட்டிற்கு அழைப்பது கிடையாது. இந்த, எம்.பி.,யின் பிடிவாத பாசத்தால், தன் வீட்டிற்கு அழைத்தாராம்.மனைவியுடன் வந்த அந்த, எம்.பி., திருநெல்வேலி அல்வா உட்பட பல அயிட்டங்களை அமைச்சருக்கு அளித்தாராம். பேசி முடித்து விட்டு, இருவரும் வீட்டுக்கு கிளம்பிய போது, அமைச்சரும், ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு சகிதமாக, எம்.பி.,க்கு வேஷ்டி, அவருடைய மனைவிக்கு புடவை பரிசாக கொடுத்து வழி அனுப்பினாராம். 'ஆடி வெள்ளியன்று புடவை கொடுத்து உள்ளீர்கள்; எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி' என, எம்.பி.,யின் மனைவி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தாராம். மோடியை கண்டபடி திட்டும் இவர் எதற்கு, மனைவியுடன் வந்து, தன்னை சந்தித்தார் என, அந்த அமைச்சர் குழம்பி தவிக்கிறாராம்.
கொடுத்த கோடிகள் எங்கே?
கர்நாடகாவில், மத சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சி அமைந்திருக்கிறது. ஆனால், பா.ஜ., ஆட்சியும் எவ்வளவு காலம் தாக்கு பிடிக்கும் என, தெரியவில்லை.இதற்கிடையே, 'கபே காபி டே' நிறுவனத் தின் தலைவரும், காங்., முன்னாள் முதல்வர், எஸ்.எம்.கிருஷ்ணாவின் மாப்பிள்ளையுமான, வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டார். வருமான வரித்துறையின் நெருக்கடியால் தான், இந்த தற்கொலை நடந்தது என, காங்கிரசார், மோடி அரசு மீது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல என்கின்றனர், நிதி அமைச்சக மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் பலர், கணக்கில் காட்டப்படாத தங்களுடைய கோடிக் கணக்கான பணத்தை சித்தார்த்தாவிடம் கொடுத்து வைத்திருந்தார்களாம். இந்தப் பணத்தை வைத்து, சித்தார்த்தா பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கிவிட்டாராம். இன்னொரு பக்கம், கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது, எம்.எல்.ஏ., சீட் தர, கட்சி காரர்களிடமிருந்து பல கோடி பணம் வாங்கப்பட்டதாம். இந்தப் பணமும், சித்தார்த்தாவிடம் தான் கொடுக்கப்பட்டதாம். சித்தார்த்தாவிடம், கணக்கில் காட்டாத பணம் நிறைய இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது என, சித்தார்த்தாவால் சொல்ல முடியவில்லை. இந்த பணத்திற்கு கூடுதல் வரி கட்ட, தன் கம்பெனி பங்குகளை விற்கவும் முடியாத நிலை. இதனால், வெறுத்துப் போனவர் தற்கொலை செய்து கொண்டாராம். இவருடைய மாமனார் கிருஷ்ணா, காங்கிரசிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, 'என் மருமகன் தப்பு செய்துவிட்டார்; அவரை காப்பாற்றுங்கள்' என, கேட்டுக் கொண்டாராம். ஆனால், அமைச்சரோ, சட்டம் தன் கடமையைச் செய்யும் என சொல்லி, கழன்று கொண்டாராம்.பல கோடி பணத்தை திரும்ப பெற முடியாமல் தவிக்கும் காங்கிரசார், இந்த விவகாரங்களை மூடி மறைக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்கின்றனர், பா.ஜ.,வினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
06-ஆக-201918:48:38 IST Report Abuse
sankar உலகமாக பொய்யனாக டுபாக்கூர் என்பது எனது திண்ணமான எண்ணம்
Rate this:
Cancel
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
04-ஆக-201906:23:18 IST Report Abuse
Balakrishnan Gurumurti உண்மை பிஜேபி MP , MLA தான் கொடுத்து இருக்கவேண்டும் நான் ஐயப்படுகிறேன் . சிட்டார்த் மிகவும் நல்ல மனிதன் எல்லாரும் சொல்கிறார்கள் .. அவர் 30,00 acre காபி எஸ்டேட் எஜமான் . மிகவும் பணிவு குணம் படைத்தவர் என்கிறார்கள் . பிஜேபி அரசியல் வாதிகள் மிகவும் அரக்கத்தனம் படைத்தவர்களில் முதல் இடம் பெறுவர் என சொல்வதில் எனக்கு ஐயமில்லை. நான் இந்த பிஜேபி அரசியல் வாதிகளை சந்தித்துள்ளேன் . இவர்களை 2007-08 பார்த்துள்ளேன் . கடுகு சிறுத்தாலும் கரம் போகுமா ? அவர்கள் எப்படுத்தவதும் டெல்லி ஈ விட்டு போக விருப்பம் இல்லை ஏனெனில் எந்த அரக்கனும் பிடித்தத இடத்தை விட்டு காலி செய்யமாட்டார்கள் .. வெளிய போனால் , அவர்கள் விஷயங்கள் எல்லாம் வெளி வரும். அதனால் அவர்களை வெளியேற்றவேண்டும் என்ற குறிக்கோள் மக்களுக்கு வேண்டும் என்பது என் அபிப்பிராயம். வந்தவர்கள் சென்றார்கள் என்ன இவர்களை போகமாட்டார்கள் என்ற விஷயம் மக்களுக்கு விளங்கவேண்டும் . அதற்கு தக்கபடி நாள் இதழ்கள் நடந்து கொள்ளவேண்டும் என்பேன்.
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
15-ஆக-201914:21:58 IST Report Abuse
TamilArasanநல்லவரும் சேர்க்கை சரி இல்லை என்றால் சறுக்கல் தான் - சித்தார்த் அவர்களின் மாமனார் SM கிருஷ்ணா முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அது மட்டும் இல்லை கடந்த UPA அரசின் ஆட்சியில் தான் சித்தார்த் அவர்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் - SM கிருஷ்ணா தற்போது BJP இல் இருந்தாலும் அவருக்கு அவ்வளவு நல்ல பேர் இல்லை. மேலும் அவர் கர்நாடகா முதல்வராய் இருந்தபோது அவரால் பாதிக்கப்பட்ட இளம் பெண் பெங்களூரில் தற்கொலை செய்து கொண்டது அங்கு அனைவரும் அறிந்த செய்தி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X