முயற்சி கூலி தரும் : பாடலாசிரியர் ஞானகரவேல் நம்பிக்கை

Added : ஆக 04, 2019
Advertisement
முயற்சி கூலி தரும் : பாடலாசிரியர் ஞானகரவேல் நம்பிக்கை

'பச்ச ஊதா மஞ்ச வெள்ள... மச்சான் வந்தானே மச்சினிக துள்ள.... மூச்சு கீச்சு மூட்டி செல்ல... இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள...' இந்த துள்ளலான 'சிறுக்கி' எனும் பாடல் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள 'காப்பான்' படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் தற்போது பட்டி தொட்டி பரவி கிடக்கிறது. சிறுசுகள், இளசுகள் முணுமுணுக்கும் இந்த பாடலை எழுதியவர் ஞானகரவேல் 35 படங்களில் 75க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதி உள்ளார். தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்த போது...

* உங்களை பற்றி...?சொந்த ஊர் முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர். சிறுவயது முதலே கவிதை எழுதுவேன். கல்லுாரி முடித்த பின் 'பூமியை சுமந்த புல்வெளி' எனும் கவிதை தொகுப்பு எழுதினேன். நண்பர்கள் ஊக்குவித்ததில் துவங்கியது என் பயணம்.

* 'சிறுக்கி' பாடல் இரட்டை அர்த்தம் போல உள்ளதே...?முதல் தடவை கேட்கும் பலர் அப்படி தான் என்னிடம் கூறினார்கள். பின் திரும்ப திரும்ப கேட்கும் போது அர்த்தம் புரிகிறது என்றனர். விவசாயத்திற்கு துணைபுரியும் ஒரு பொருளை முன்னிலைப்படுத்தி இப்பாடல் எழுதி உள்ளேன். என்ன பொருள் என ரசிகர்கள் படத்தில் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.

* புதிர் போடுகிறீர்களே...?படத்தின் முதல் பாடலான இதில் நையாண்டி, நக்கல் அதிகமாக, விவசாயத்தையும், கிராமப்புற வாழ்வியலையும் எடுத்துரைக்கும் பாடலாக இருக்க வேண்டும் என்றார் இயக்குனர் கே.வி.ஆனந்த். அதன்படி எழுதினேன். அந்த வரிகள் பலரை முணுமுணுக்க வைத்தது மகிழ்ச்சி.

* நீங்கள் எழுதிய பாடல்களில் ரசிகர்கள் முணுமுணுத்தவை.என் முதல் பாடல் 'பூ' படத்தில் இடம்பெற்ற 'சிவகாசி ரதியே', அதை தொடர்ந்து 'கிருமி'யில் 'ஓசி சோறு தின்னுகின்னு', துங்காநகரம் படத்தில் 'வைகை சிரிச்சா துாங்கா நகரம்', ஆண்டவன் கட்டளையில் 'யாரோ பெத்த புள்ள', 'வாடகை வீடு', 'இலந்த பழத்த', '108 தேங்கா', அம்மணியில் 'ரோட்டோர பாதையிலே' உள்ளிட்ட பல பாடல்கள் எழுதி இருக்கிறேன்.

* சிறந்த அனுபவமாக கருதுவது...?இயக்குனர் கே.வி.ஆனந்துடன் நட்பு கிடைத்தது. மிகவும் நேர்மையான மனிதர். அவருடன் பழகியதும், பணியாற்றியதும் சிறந்த அனுபவமாக கருதுகிறேன்.

* பாடலாசிரியர் டூ வசனகர்த்தா எப்படி...?'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் படத்தில் வசனம் எழுதி உள்ளேன். இயக்குனர் ஆர்.டி.எம்., இயக்குகிறார். அனைத்து கவிஞர்களும் வசனகர்த்தாக்கள் தானே.

* அடுத்த படங்கள்....இமான் இசையில் பக்ரீத் உள்ளிட்ட 6 படங்களில் பாடல் எழுதி இருக்கிறேன்.

* சமூக கருத்துகள் வரிகளில் கொட்டிக் கிடக்கிறதே...?அனைத்து பாடல்களிலும் சமூகம் சார்ந்த உள்ளார்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். நானும் இந்த சமூகத்தில் ஒரு பகுதிதான். ஆண்டவன் கட்டளை படத்தில் இடம்பெற்ற 'யாரோ பெத்த புள்ள' பாடலில் 'மேல போற ராக்கெட்டுக்கு அள்ளி தர்றோமே... கீழே போற பஸ்சு ஓடுது பிரேக்கே இல்லாம' என்ற வரி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

* இளம் பாடலாசிரியர்களுக்கு கூறுவது...?ஊரிலே இருந்துவிடாதீர்கள். சென்னைக்கு வாருங்கள். முயற்சி மெய்வருத்த நிச்சயம் கூலி தரும். இங்கிருந்து ஒரு வாழ்க்கை போராட்டத்தை துவங்குங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.இவரை பாராட்ட gnanakaravel@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X