'டியர்' ராஷ்மிகா

Added : ஆக 04, 2019
Advertisement
'டியர்' ராஷ்மிகா

நவரசம் காட்டும் நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்க 'டியர் காம்ரேட்'ல் களமிறங்கி, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயருடன் வெற்றி வாகை சூடப்போகும் ராஷ்மிகா மனம் திறக்கிறார்...

* உங்களைப் பற்றி சொல்லுங்க ?நான் சென்னை பொண்ணு... வயசு 23, சைக்காலஜி, இதழியல் படிச்சிருக்கேன் விளையாட்டில் துரோபால், கிரிக்கெட், ஸ்விம்மிங், புட்பால் தெரியும். சாப்பிடற அளவுக்கு கொஞ்சம் சமைக்க தெரியும். ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி தெரியும், தமிழ் கொஞ்சம் புரியும்.

*'டியர் காம்ரேட்'ல் உங்க கேரக்டர் பற்றி ?இந்த படத்தில் உண்மையா நான் நடிச்சிருப்பேன் அழனும்னா உண்மையா அழுதிருப்பேன். சிரிக்கனும்னா முழுசா சிரிச்சிருப்பேன், சென்டிமென்ட்டை உண்மையா காட்டியிருப்பேன். லில்லி என்ற கேரக்டரில் கிரிக்கெட் பிளேயரா நடிச்சிருக்கேன்.

* நீங்கள் கிரிக்கெட் ரசிகராமே ?முதல் முறையாக உலகக் கோப்பை மேட்ச் பார்த்தேன். ரொம்ப மனசு கஷ்டமா இருந்தது. 'தோனி தோனி'ன்னு 'டிவி' பார்க்கும் போதே கத்திட்டு இருப்பேன். நியூசிலாந்து மேல எனக்கு அப்போ ரொம்ப கோபம் வந்துச்சு. நிறைய தோல்விகளை என்னால் தாங்க முடியாது. அதனால், நான் அதிகம் கிரிக்கெட் மேட்ச் பார்க்க மாட்டேன்.

* விஜய் தேவர் கொண்டவிற்கு பெண் ரசிகைகள்?ஆமா அவருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்காங்க. 'டியர் காம்ரேட்'ல் போட்டி போட்டு நடிச்சிருக்கோம். மூன்று கேரக்டரில் இந்த படத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய் தேவர் கொண்ட, ராஷ்மிகா ஜோடி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. இவருடன் ரெண்டு படம் நடித்ததில் அவரது பெண் ரசிகைகளுக்கு என் மேல பொறாமை கூட இருக்கும்.

* ராஷ்மிகா பலம், பலவீனம் என்ன ?என்ன சுத்தி இருக்கவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்குறது தான் என் பலம். யாரா இருந்தாலும் ரொம்ப விழுந்து கவனிக்குறது, எங்கேயோ எதோ நடந்தால் துடிப்பது என் பலவீனம்.

* பொய் பேசுவீங்களா ?முன்னாடி மாதிரி இப்போ ரொம்ப பொய் பேசறது இல்லை. நேர்மையா சொல்றேன்; ஏதாவது தவிர்க்க முடியாத நேரத்தில் கொஞ்சம் பொய் பேசுவேன்

* சமூக அவலங்கள் உங்களை எப்படி பாதிக்கிறது ?அவலங்கள் நடந்தால் அதில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவி செய்ய நினைப்பேன். குழந்தைகளுக்காக எப்பவும் குரல் கொடுப்பேன். ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்திற்கு நான் உதவியாக இருக்கணும். இல்லைன்னா நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. என்னிடம் இருக்கும் பொருள், பணத்தை முடிந்த அளவு கொடுத்து உதவுவேன்.

* சென்னை பொண்ணு என்பதில் பெருமையாபெருமையா இருக்கு. என் முதல் படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடுது. நான் முதன் முதலில் தமிழ் எழுத படிக்க கத்துக்கிட்டது சென்னையில் தான். சென்னையில் மனசுக்கு பிடித்த ரசிகர்களுடன் படம் பார்த்த போது சந்தோஷமா இருந்தது.

* இனி தமிழ் சினிமாவில் உங்களை பார்க்கலாமா ?கண்டிப்பா பாக்கலாம்; நிறைய நல்ல கதைகளில் நடிப்பேன். அடுத்தது கார்த்தி, விஜய் உடன் நடிக்கிறேன்.

* தமிழ் ரசிகர்கள் குறித்து ?தமிழ் ரசிகர்கள் நிறைய அன்பு கொடுக்குறாங்க. இன்னும் ஆதரிப்பார்கள் என்று நம்புறேன். இருபது முப்பது வருஷத்திற்கு பின்பும் நீங்கள் என்னை நினைத்து பெருமைப்படும் அளவுக்கு நடிப்பேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X