'டிவி'க்களுக்கு சென்சார் இல்லை என்றால் அடுத்த தலைமுறை பாழாகும் : எஸ்.வி.சேகர் 'பளீச்'

Added : ஆக 04, 2019 | கருத்துகள் (16)
Advertisement
'டிவி'க்களுக்கு சென்சார் இல்லை என்றால் அடுத்த தலைமுறை பாழாகும் : எஸ்.வி.சேகர் 'பளீச்'

தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களை சிரிக்க வைப்பவர். மேடை நாடகங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி காமெடியில் வெற்றி கொடி கட்டி பறப்பவர். தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்த நடிகராக, அரசியல் மற்றும் ஆன்மிகவாதியாக சிரித்த முகத்துடன் வலம் வரும் நகைச்சுவை நாயகன் எஸ்.வி.சேகர் மதுரையில் தன் 'காமெடி தர்பார்', 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகங்களை சில நாட்களுக்கு முன் நடத்தினார். கிடைத்த ஓய்வின் போது தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த நிமிடங்கள்...

* 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகம் எப்படி உருவானது?என் முதல் நாடகம் மவுலி இயக்க நாகேஷ் நடித்தார். இரண்டாவது 'கண்ணாமூச்சி', மூன்றாவது 'திரும்பி வந்த மனைவி'யை கே.கே.ராமன் எழுதினார். ஒரு முறை ராமன் என்னிடம் 'புதுசா ஒரு பையன் இருக்கிறார் பேர் மோகன். சாய் பாபா கோயிலுக்கு வருவார்; நீங்கள் சென்று பாருங்கள்' என்றார். கோயிலுக்கு வந்த மோகனிடம் 'என்ன செய்வீர்கள்' என்று கேட்ட போது 'நடிப்பேன்' என்றார். 'நானே இப்போது தான் நடிக்கிறேன்; நீ வேறு ஏதாவது செய்' என்றேன். 'காமெடி எழுதுவேன்' என்றார். அதற்கு பின் மோகன் எழுதிய 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நான்காவது நாடகமாக அரங்கேறியது. இயக்குனர் பாலச்சந்தரின் 'நாணல்' படக் காட்சிகளை நாடகத்தில் காமெடி செய்தோம். மோகன் எழுதி கொடுத்த 850 பக்கம் கதையை 85 பக்கமாக்கினோம். அதற்கு பின் அந்தமோகன் 'கிரேஸி மோகன்' ஆனார்.


* கிரேஸி மோகன் - எஸ்.வி.சேகர் நினைவலைகள்?மோகன் எப்போதும் வெற்றிலை, பாக்கு போடுவார். பதட்டப்படவே மாட்டார். 'மணல் கயிறு 2'ல் 'டாக்டர் வேஷம் இருக்கு பண்றீயா' என்றேன். அதற்கு அவர் 'பண்றேன்; ஆனால் நான் துாங்கினாஎழுப்பாதே' என்றார். 'ஸ்கிரிப்ட் படிக்கிறேன்' என்பார்; பிறகு ஸ்கிரிப்ட் படித்தீர்களா என்றால், 'பரண் மேலே வைச்சேன் எலி கடிச்சிருச்சு' என்பார். 'பேனாவில் இங்க் ஊற்றி எழுதினீரா, இல்லை தேங்காய் எண்ணெய் ஊற்றி எழுதினீரா' என்பேன். இப்படி நிறைய காமெடி செய்வார். அவரை அறிமுகம் செய்ததில் எனக்கு பெருமை.

* உங்கள் நாடகங்களிலும், இன்றைய அரசியல் காமெடி இடம்பெற்றிருக்கிறதே ?என் நாடகங்கள் அரங்கேறும் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வசனம், காட்சிகளை சேர்ப்பேன். ஒரு எம்.ஜி.ஆர்., படத்தில் தங்கவேல் கதாகாலட்சேபம் செய்யும் போது 'எப்படி இருப்பேன் பேன்... பேன்' என்பார் அந்த அரங்கில் 'பேன்' சுத்தாது. இது போல சூழ்நிலையை நாடகத்திற்கு சாதகமாக கையாண்டு நகைச்சுவை செய்வது என் ஸ்டைல்.

* உங்கள் பார்வையில் மேடை நாடகம் என்பதற்கு இலக்கணம் என்ன ?நாடகம் என்பது தினமும் நடக்கும் பிரசவம், மேடை ஏறிய பின் ரசிகர்களுக்கு சிரிப்பு வந்தால் தான் சிறந்த நாடகம். எங்கள் நாடகத்தில் நடிகர்களின் முகத்தில் விளக்கு வெளிச்சம் இருக்கும், பேசுவது கடைசி வரிசை வரை கேட்கும். தேர்தல் நேரத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றிய போது 'அங்கே பார் மோடி டீ ஸ்டால், அது தான் நமக்கு சிறந்த டீ தரும்' என்பேன். அதற்கு மற்றொருவர் 'அருகில் பால் ஊற்றுகிறார்களே' என்பதற்கு 'அது எதிர்கட்சி' என்பேன். இலைமறை காயாக அரசியல் நையாண்டி இருக்குமே தவிர தவறான வார்த்தை பிரயோகம் இருக்காது.

* திரைப்படமான எஸ்.வி.சேகர் நாடகங்கள்...என் 'அதிர்ஷ்டக்காரன்' நாடகம்தான் 'கிருஷ்ண கிருஷ்ணா' படம். என்னுடைய சில நாடகங்கள் சினிமாவிற்கு ஏற்ற கதைகள். ஆனால் இன்றைய சினிமாவிற்கு கதை முக்கியம் இல்லை. பிரமாண்ட காட்சிகள், அடுத்தவர்கள் மனம் புண்படும் அளவிற்கு வசனங்கள் என டிரண்ட் மாறிவிட்டது.

* செகண்ட் பார்ட் படங்கள் பெரியளவில் வெற்றி பெறுவதில்லையே?36 ஆண்டுக்கு பின் எடுத்த என் 'மணல் கயிறு 2' பெரிய வெற்றி பெற்றது. முதல் பார்ட்டில் நடித்த அதே மூன்று கேரக்டர்கள் செகண்ட் பார்ட்டில் நடித்தோம். முதல் பார்ட் கதாநாயகிக்கு குரல் கொடுத்தவரே இன்றைய கதாநாயகிக்கும் குரல் கொடுத்தார். அந்த படத்தை விமர்சனம் செய்த 20 பத்திரிகையாளர்கள் இந்த படத்தையும் விமர்சனம் செய்தனர்.

* இதுவரை நீங்கள் நடித்த நகைச்சுவை திரைப்படங்கள் குறித்து ?இதுவரை நான் நடித்த 95 படங்களில் 70 படங்கள் நுாறு நாட்கள் ஓடின. நான் நடித்தால் ஓடாது என்று தோன்றிய 199 படங்களை ஒதுக்கி விட்டேன். உழைக்காத பணம் எனக்கு வேண்டாம் என்று நினைப்பேன். நான் நகைச்சுவை நடிகன் அல்ல; நகைச்சுவை படங்களின் கதாநாயகன். எந்த படத்திலும் நான் தனியாக நகைச்சுவை செய்யவில்லை; கதையோடு தான் செய்திருக்கிறேன். 'குடும்பம் ஒரு கதம்பம்' உள்ளிட்ட விசு படங்களில் நான் நன்றாக பொருந்தினேன்.

* சினிமாவில் குடும்பக் கதை, டிவி சீரியல்களில் குடும்பக் கதை ?சினிமா குடும்பக் கதைகளில் ஒரு கெட்ட கேரக்டர், பல நல்ல கேரக்டர்கள் இருக்கும். டிவி சீரியலில் ஒரு நல்ல கேரக்டர், பல கெட்ட கேரக்டர்கள் இருக்கும். மாமியாருக்கு விஷம் வைப்பது, துாங்கும் போது தலையணை வைத்து அமுக்குவது என வக்கிரங்கள் அதிகம். சினிமாவுக்கு கூட சென்சார் தேவையில்லை; 'டிவி'க்களுக்கு சென்சார் வரவில்லை என்றால் அடுத்த தலைமுறையை பாதிக்கும்.

* இன்றைய அரசியல், நாட்டு நடப்பு எப்படி இருக்கிறது ?இன்றைய அரசியலில் தரம் இல்லை, தரமான அரசியல் டில்லியில் தான் உள்ளது. தனி மனித தாக்குதல் அதிகமாகி விட்டது. கடவுள் மறுப்பு பேசுபவர்கள் சினிமாவில் பட்டை விபூதி பூசிக் கொள்வர். ஒரு படத்தில் நடிகை பண்டரி பாயை மிதிப்பது போல நடிக்கக் கூறியதால் நான் நடிக்க மறுத்தேன். எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது.

* உங்களை, உங்கள் நாடகத்தை ரசித்த மதுரை மக்கள் ?மதுரையில் இரண்டு நாடகங்களும் 'ஹவுஸ் புல்'. அந்த அளவிற்கு மக்கள் நாடகங்களை ரசித்தனர். எங்கள் வெற்றிக்கு தினமலர் பெரியளவில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் விரும்பும் வகையில் நாடகம் நடத்தி உள்ளேன். பொது வாழ்க்கையில் இருக்கும் நான் தொடர்பு எல்லைக்குள் இருப்பவன். அதனால், மக்கள் நேரடியாக என்னை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறினார். இவருடன் நீங்களும் பேச 98410 23545க்கு அழைக்கலாம்

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
21-ஆக-201908:02:26 IST Report Abuse
Raj கொஞ்ச நாளைக்கு முன்னாலே பத்திரிக்கை துறையிலுள்ள பெண்களை பற்றி இவர் அனுப்பிய செய்தி இன்னும் மறக்கவில்லை. ஊருக்கு உபதேசம்.
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
18-ஆக-201917:42:17 IST Report Abuse
முதல் தமிழன் இதை சொல்ல இவருக்கு எந்த அருகதையும் இல்லை? இவரே ஒரு ரெட்டை வசன கர்த்தா.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
16-ஆக-201915:49:44 IST Report Abuse
Jayvee சன் டிவி ஒன்பது மணி சீரியல் இடைவேளையில் வரும் ஆணுறை விளம்பரம் ஒன்று போதும். குடும்பத்தை சீரழிக்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X