அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலுாரில் இன்று ஓட்டுப்பதிவு

Added : ஆக 04, 2019
Advertisement
 வேலுாரில் இன்று ஓட்டுப்பதிவு

வேலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, இன்று நடக்கிறது. இதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர், ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தி.மு.க., வேட்பாளராக, அக்கட்சியின் பொருளாளர், துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். மொத்தம், 28 பேர் களத்தில் இருந்தாலும், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே தான் நேரடிப்போட்டி.முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோர், பிரசாரம் செய்தனர்.

தேர்தல் பணிஇரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும், தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர். இதனால், வெற்றி யாருக்கு கிடைக்கும் என, பெரிதாக விவாதமே நடந்து வருகிறது.தொகுதியில், 14 லட்சத்து, 32 ஆயிரத்து, 555 வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவு, இன்று காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது. மக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதற்கு வசதியாக, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள, 1,563 ஓட்டுச் சாவடிகளில், 850 இடங்களில், வெப் கேமரா வாயிலாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில், 20 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். பொது விடுமுறைவாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வசதியாக, வேலுார் மாவட்டத்திற்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாலை, 6:00 மணிக்குள் ஓட்டுப்பதிவு மையத்திற்கு வருபவர்களுக்கு, டோக்கன் வழங்கி ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 9ம் தேதி நடக்க உள்ளது.ஆந்திர ரவுடிகள் குவிப்பு? போலீசார் கண்காணிப்புவேலுாரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 38 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் இருந்து, ரவுடிகளை அழைத்து வந்து, வாக்காளர்களை மிரட்டி, ஓட்டு போடச் செய்து, சிலர் கலவரம் ஏற்படுத்தலாம் என்ற தகவல், போலீசாருக்கு வந்துள்ளது. இதையடுத்து, சித்துார் மாவட்ட ரவுடிகள், வேலுாரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.வேலுார் மாவட்ட போலீசார் கூறியதாவது:சித்துார் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியல், படங்கள், அவர்களது மொபைல் போன் எண்களுடன், அம்மாநில போலீசாரிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு மற்றும் நன்னடத்தை விதிகள் முடியும் வரை, வேலுார் தொகுதியில், அவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி, ரவுடிகள் நுழைகின்றனரா என்பதை கண்காணிக்க, தமிழக - ஆந்திர எல்லைகளில், 12 சோதனை சாவடிகள் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. சித்துார் ரவுடிகள் இடம் பெயர்வது குறித்து, அம்மாநில போலீசாரும், கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு நுழைவது தெரிந்தால், வேலுார் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர். சித்துார் மாவட்ட ரவுடிகளின் மொபைல் போன்களும் கண்காணிக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.ரூ.7.51 கோடிக்கு மது விற்பனைவேலுாரில், நேற்று முன்தினம் முதல், இன்று வரை, 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், 'குடி'மகன்கள், 2ம் தேதியே, மாவட்டம் முழுவதும் உள்ள, 234 டாஸ்மாக் கடைகளில், 12 ஆயிரத்து, 750 கேஸ் மதுபானங்கள், 40 ஆயிரத்து, 205 கேஸ் பீர்கள் வாங்கி பதுக்கி விட்டனர். இதன் மதிப்பு, 7 கோடியே, 51 லட்சம் ரூபாய்.இது எப்படி இருக்கு?தி.மு.க., வேட்பாளர், கதிர் ஆனந்த், காட்பாடியைச் சேர்ந்தவர். அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குள் வரும். அங்கு, கடந்த முறை, ஓட்டு போட்டு விட்டார். அதேபோல, அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகத்தின், சொந்த ஊர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ளது. கடந்த முறை, ஆரணி லோக்சபா தொகுதியில், அவர் ஓட்டு போட்டு விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X