அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமரின் உதவி தொகை திட்டம்

Added : ஆக 04, 2019
Advertisement

பிரதமரின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த, 34 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆண்டுதோறும் மூன்று தவணைகளில், 6,000 ரூபாய் வழங்கும், பிரத மரின் விவசாய உதவித்தொகை திட்டத்தை, பிப்ரவரியில் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமானோர், உதவித்தொகை பெற, வேளாண் துறையிடம் விண்ணப்பித்தனர். மத்திய அரசின் விதிகளால், 28 லட்சம் விவசாயிகள் மட்டுமே, இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு, இரண்டு தவணைகளாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது தவணை உதவித்தொகை வழங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்கிடையே, 'சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து விவசாயிகளுக்கும், இந்த உதவித்தொகை வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, தகுதி யுடைய விவசாயிகளை, வேளாண் துறையினர் தேர்வு செய்து வருகின்றனர்.தற்போது, இந்த திட்டத்தில், 34 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, இரண்டு தவணைக்கான நிதியாக, தலா, 4,000 ரூபாயை வேளாண் துறையினர் பெற்று தந்துள்ளனர். இதுவரை, இத்திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளுக்கு, மத்திய அரசு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X