அரசியல் செய்தி

தமிழ்நாடு

பேராயர் எஸ்றா சற்குணம் மீது டி.ஜி.பி., யிடம், பா.ஜ., புகார்

Added : ஆக 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : பிரதமர் மோடியை அவதுாறாகவும், தரம் தாழ்ந்தும் பேசியதாக, இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர், பேராயர் எஸ்றா சற்குணம் மீது, டி.ஜி.பி., யிடம், பா.ஜ., புகார் அளித்துள்ளது.

இது குறித்து, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி, ஆன்லைன் வாயிலாக, டி.ஜி.பி.,க்கு அனுப்பியுள்ள புகார்:கடந்த, 2ம் தேதி, தனியார், 'டிவி' சேனல் ஒன்றின் நேர்காணலில், பிரதமர் மோடியை அவதுாறாகவும், தரம் தாழ்ந்தும், பேராயர் எஸ்றா சற்குணம் பேசியது, சமூகவலை தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.புகார் மனுவை ஏற்றதற்கான ரசீதை, அபிராமபுரம் போலீசார், நேற்று நாராயணன் திருப்பதியிடம் வழங்கினர்.

இது குறித்து, நாராயணன் திருப்பதி கூறுகையில், ''எஸ்றா சற்குணம் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியாக நம்புகிறேன்,'' என்றார்.ஏற்கனவே, 'ஹிந்து மதத்திற்கு எதிராக பேசி வன்முறையை துாண்டுகிறார்' என, எஸ்றா சற்குணம் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
05-ஆக-201915:44:48 IST Report Abuse
s.rajagopalan இந்த ஆளு எஸ்ரா 'ச ர் கு ணம் ' இல்லே ...எஸ்.ரா 'துர்குணம் " ...ரொம்ப ஓவரா எப்போதும் பேசற வழக்கம். கருணாநிதியின் தோஸ்த் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X