இந்தியாவுக்கு இஸ்ரேல் தூதரகம் வாழ்த்து

Added : ஆக 04, 2019
Advertisement

புதுடில்லி, : நண்பர்கள் தினத்தை யொட்டி, இந்தியாவுக்கு இஸ்ரேல் துாதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும், 'நண்பர்கள் தினம்' நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின், டில்லி துாதரக அலுவலகம் சார்பில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.டுவிட்டரில் வெளியிடப்பட்ட பதிவில், 'இந்தியாவுக்கு, நண்பர்கள் தினம், 2019ன் வாழ்த்துக்கள்; நமது வலுவான நட்பும், கூட்டாண்மையும் தொடர்ந்து வளர்ந்து, அதிக உயரங்களை தொடும்' என, கூறப்பட்டிருந்தது. அத்துடன், ஷோலே என்ற ஹிந்தி திரைப்படத்தில் வரும், 'இந்த நட்பை நாங்கள் உடைக்க மாட்டோம்' என்ற பொருள் தரும், 'யே தோஸ்தி ஹம் நஹி டோடெங்கே' பாடல் வரியையும் இணைந்து, டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆகியோர் கைகுலுக்கி, அரவணைக்கும் புகைப்படங்களின் தொகுப்பையும் வெளியிட்டுள்ளது.இஸ்ரேலுக்கு, 2017ல் பிரதம் மோடி சென்றார். அந்நாட்டுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெயரையும், மோடி பெற்றார். மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், இரண்டாவது முறையாக, பிரதமர் மோடி வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் வெளிநாட்டு தலைவர், இஸ்ரேல் பிரதமர், நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இஸ்ரேலில், செப்., 17ல், தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, நேதான்யாகுவுடன், பிரதமர் மோடி இருக்கும் படம் இடம் பெற்றுள்ள பிரமாண்ட, 'பேனர்' இஸ்ரேலின், டெல் அவிவ் நகரில், மிக உயர கட்டடம் ஒன்றில் வைக்கப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X