ரூ.204 கோடி நஷ்ட ஈடு கேட்டு காங்., 'மாஜி' மந்திரி வழக்கு

Added : ஆக 04, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பெங்களூரு : கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சர், டி.கே.சிவகுமார், தனக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு சுமத்தியதாக, பா.ஜ., தலைவர், பசவனகவுடா பாட்டீல் எத்னால் மீது, 204 கோடி ரூபாய், மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, அமைச்சராக இருந்தவர் டி.கே.சிவகுமார். இவர் மீது, பா.ஜ.,வை சேர்ந்த பசவன கவுடா, குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். பசவன கவுடா கூறியிருந்ததாவது:தனக்கு எதிராக வருமான வரித்துறை, அமலாக்க பிரிவினர் பதிவு செய்துள்ள வழக்கிலிருந்து விடுதலை பெற உதவி செய்யும்படி, பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷாவுக்கு, சிவகுமார் நெருக்கடி கொடுத்தார்.

தன்னை வழக்கிலிருந்து விடுவித்தால், அதற்கு பதிலாக, கர்நாடகாவில், பா.ஜ., ஆட்சிக்கு வர எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்றும், சிவகுமார் உறுதி கூறியிருந்தார்.இவ்வாறு பசவன கவுடா கூறியது, பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியானது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு ரூரல் மாவட்டத்தின் கனகபுராவிலுள்ள முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், டி.கே.சிவகுமார், வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், 'என் கவுரத்தை பாழாக்கும் விதத்தில், பொய் குற்றச்சாட்டு சுமத்திய பசவனகவுடா பாட்டீல் எத்னால், 204 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள நீதிமன்றம், பசவனகவுடா பாட்டீல் எத்னாலுக்கு, நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை, செப்.,18க்கு தள்ளி வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-ஆக-201907:33:20 IST Report Abuse
ஆரூர் ரங் காங்கிரஸ்காரனுக்கு மானம் வெட்கம் ரோஷமெல்லாம் இருக்குதுஞ்சு கேஸ். இதனை கோர்ட் விசாரணைக்கு ஏற்பது கோர்ட்டுக்கே அவமானம் . முதலில் சித்தார்த்தா மரணத்தில் தனக்குள்ள தொடர்பை கூறட்டும் .பலரின் சந்தேகப்பார்வையும் சிவா மீதுதான்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஆக-201900:17:05 IST Report Abuse
 Muruga Vel எத்னால் ...இப்படியும் பெயரா ...பெட்ரோல்ல கலக்கர சமாச்சாரம் ஆச்சே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X