பதிவு செய்த நாள் :
காங். , கட்சியின் அடுத்த தலைவர் யார்
10ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவு

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அந்த கட்சியின் செயற் குழு கூட்டம், வரும், 10ல், டில்லியில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவர் ஒருவரை நியமிக்கும் அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

காங்கிரஸ், கட்சி, தலைவர், யார்,  கூட்டம், முடிவு


சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில், 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், லோக்சபாவில், பிரதான எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை, மீண்டும் பெற முடியாமல் போய் விட்டது.தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராகுல் அறிவித்தார்.

உறுதி:


இதைத் தொடர்ந்து, பீஹார், கர்நாடகா, உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த காங்., தலைவர்களும், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.ராஜினாமா அறிவிப்பை வாபஸ் பெறும்படி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும், ராகுலை சந்தித்து, வலியுறுத்தினர்.

ஆனால், தன் முடிவில் உறுதியாக இருப்பதாக, அவர் தெரிவித்து விட்டார். இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு மேலாக, தலைவர் இல்லாத கட்சியாகவே, காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரசின் புதிய தலைவராக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், எம்.பி.,க்கள், குலாம் நபி ஆசாத், சசி தரூர் ஆகியோரில், யாராவது ஒருவர் நியமிக்கப்படலாம் என, பேச்சு அடிபட்டது.

அதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே, ராகுலின் சகோதரி பிரியங்காவை, கட்சியின் தலைவராக அறிவிக்கும்படி, மூத்த தலைவர்கள் தரப்பில் வலியுறுத்தப் பட்டது.

பா.ஜ.,வுக்கு ஓட்டம்


ஆனால், 'எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும், தலைவர் பதவி வகிக்க மாட்டோம்' என, ராகுல்,திட்டவட்டமாக கூறி விட்டார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள், பா.ஜ.,வுக்கு தாவினர்.

வேறு சில மாநிலங்களிலும், காங்கிரஸ் பிரமுகர்கள், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக, தகவல்கள் கசிந்துள்ளன.இதையடுத்து, கட்சியின் புதிய தலைவர் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் செயற்குழு கூட்டம், வரும், 10ல், டில்லியில் நடக்கவுள்ளது. கட்சியின் மூத்த பொதுச் செயலர் ஒருவர், இந்த கூட்டத்துக்கு தலைமை வகிக்கவுள்ளார்.

வாய்ப்பு குறைவு


இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:இந்த கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படும். ஆனாலும், புதிய தலைவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு, மிகவும் குறைவு;

அதற்கு பதிலாக, இடைக்கால தலைவராக, யாராவது ஒருவர், இந்த கூட்டத்தில் நியமிக்கப்படலாம்.பிரியங்காவை, தலைவராக நியமிப்பது குறித்து, பலரும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான சூழல் குறித்தும், இந்த கூட்டத்தில் அலசப்படும்.லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், முக்கிய பொறுப்பு வகித்தபலரும், ராஜினாமா செய்துள்ளதால், அவர்களுக்கு பதிலாக, புதிய வர்களை நியமிப்பது குறித்தும், இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


பிரியங்காவுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

'காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, பிரியங்காவை தேர்வு செய்ய வேண்டும்' என, நேரு குடும்பத்து விசுவாசிகள் பலரும், கருத்து தெரிவித்து வருகின்றனர். ராகுல், இதற்கு சம்மதிக்காவிட்டாலும், பிரியங்கா, இது பற்றி வெளிப்படையாக, இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.எனவே, பிரியங்காவை தலைவராக நியமிக்கும்படி, உயர்மட்ட குழு கூட்டத்தில், பலரும் குரல் எழுப்பவுள்ளனர்.

இது குறித்து, காங்., மூத்த தலைவர், கரண் சிங் கூறிதாவது:காங்கிரசின் அடுத்த தலைவர் பதவியை வகிப்பதற்கான தகுதி, பிரியங்காவுக்கே, அதிகம் உள்ளது. ராகுலுக்கு பின், தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும், எந்தவித மாற்றுக் கருத்துமின்றி, ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக, பிரியங்கா ங்குகிறார்.கட்சியை ஒருங்கிணைக்கும் சக்தியாக, பிரியங்கா இருப்பார்.

இதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒரு தேசிய கட்சிக்கு, தலைவர் இல்லாமல் இருப்பது, அந்த கட்சியை, மேலும் பலவீனப்படுத்தும். சசி தரூர் போன்றவர்கள், பிரியங்காவை தலைவராக்கும்படி, ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர்.பிரியங்காவின், விருப்பம் என்ன என்பது தெரியவில்லை. அவரது முடிவை பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். அவர், தலைவராக தேர்வு செய்யப்பட்டால், எல்லாரும் மகிழ்ச்சி அடைவர். அவர், மிகவும் புத்திசாலி. களத்தில் இறங்கி போராடுவதற்கும் தயங்காதவர். சாதாரண மக்களுடன், நல்ல தொடர்பு வைத்துள்ளார் .இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
06-ஆக-201909:15:49 IST Report Abuse

kalyanasundaramWHERE IS KHANGRASS PLEASE INFORM INTER POLL FOR HELP

Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-ஆக-201920:52:32 IST Report Abuse

அசோக்ராஜ் ஓடிப்போணவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு. அகப்பட்டுக்கப் போறவனுக்கு அட்டமத்துல சனி. சிக்க மாட்டேன்றாணுவளே.

Rate this:
SENTHIL - tirumalai,இந்தியா
05-ஆக-201919:12:32 IST Report Abuse

SENTHILஅனேகமாக உங்களுக்கு தலைவர் என்று யாரும் தேவை பட வேண்டியது இல்லை. காரணம், ஆளில்லாத கடையில் யாருக்கு சார் டீ ஆத்துறீங்க

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X