டில்லி சட்டசபையில் இனி காகிதம் கிடையாது

Added : ஆக 04, 2019
Advertisement

புதுடில்லி : காகித பயன்பாடு இல்லாத சட்டசபையாக, டில்லி சட்டசபை மாற உள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டம் அமலாக உள்ளது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. மாநில சட்ட சபையில் காகிதம் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சட்டசபை சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது: டில்லி சட்டசபையில் காகிதத்தின் பயன்பாட்டை முழுமையாக குறைக்க உள்ளோம். இதற்காக, 20 கோடி ரூபாய் செலவில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், 'தேசிய இ - விதான் அப்ளிகேஷன்' முறையை பயன்படுத்தப் போவதில்லை. தனியாக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வின் இருக்கையிலும், எல்.சி.டி., திரை இருக்கும். அதில், சபையின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொருவருக்கும், 'டேப் லெட்' வழங்கப்படும். அதில் இருந்து, சட்டசபை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X