பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
டில்லி சட்டசபையில்
இனி காகிதம் கிடையாது

புதுடில்லி: காகித பயன்பாடு இல்லாத சட்டசபையாக, டில்லி சட்டசபை மாற உள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டம் அமலாக உள்ளது.

டில்லி, சட்டசபை, காகிதம், கிடையாது


டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. மாநில சட்டசபையில் காகிதம் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சட்டசபை சபாநாயகர், ராம் நிவாஸ் கோயல் கூறியதாவது: டில்லி சட்டசபையில் காகிதத்தின் பயன்பாட்டை முழுமையாக குறைக்க உள்ளோம்.

இதற்காக, 20 கோடி ரூபாய் செலவில், புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'தேசிய இ - விதான் அப்ளிகேஷன்' முறையை பயன்படுத்தப் போவதில்லை. தனியாக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வின் இருக்கையிலும், எல்.சி.டி., திரை இருக்கும். அதில், சபையின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொருவருக்கும், 'டேப் லெட்' வழங்கப்படும். அதில் இருந்து, சட்டசபை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

தலித் மாணவருக்கு உதவி தொகை டில்லி, எஸ்.சி., - எஸ்.டி., நலத்துறை அமைச்சர், ராஜேந்திர பால் கவுதம் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி படிப்பதற்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

Advertisement

100 மாணவர்களுக்கு, தலா, 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் என, எந்தத் துறையாக இருந்தாலும், இந்த உதவித் தொகையை பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

சபையின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொருவருக்கும், 'டேப் லெட்' வழங்கப்படும். அதில் இருந்து, சட்டசபை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-ஆக-201922:35:55 IST Report Abuse

Natarajan Ramanathanபுகழ்......இந்த விஷயம் ஏற்கனவே நாயுடு ஆந்திராவில் கொண்டுவந்துவிட்டார்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஆக-201921:50:22 IST Report Abuse

Pugazh Vஇந்த டிஜிட்டல் பரிவர்த்தனை யைப் பாராட்ட மனமில்லாதவர்கள் வாயை மூடிக்கிட்டாவது இருக்கலாம். இந்த அறிவியல் முன்னேற்றத்தை கொண்டு வருவதில் கேஜ்ரிவால் முந்திக்கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை பாவம்.

Rate this:
05-ஆக-201920:09:05 IST Report Abuse

ஆப்புஇனிமே சட்டசபை, லோக்சபை, ராஜ்ய சபையில் விவாதமே கிடையாது... காகிதத்தைப் பத்தி பேசறியா?

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X