விமானத்தில் பயணம் செய்யுங்க! ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு

Added : ஆக 04, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு, ரயிலில் செல்வதற்கான, 'ஏசி' வகுப்பு கட்டணத்தை விட, விமான கட்டணம் குறைவாக உள்ளது.

இதையடுத்து, தென் மேற்கு ரயில்வே அலுவலகம், தங்கள் அதிகாரிகள், அலுவல் ரீதியான பயணங்களை, விமானத்திலேயே மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது. ரயில்வேயின் தென் மேற்கு மண்டல அலுவலகம், கர்நாடக மாநிலம், ஹூப்பளியில் உள்ளது. இங்கு பணியாற்றும் அதிகாரிகள், அலுவல் ரீதியான கூட்டங்களுக்கு, அடிக்கடி, டில்லி, மும்பை, கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு செல்வது வழக்கம்.

இதற்காக ரயிலில் பயணம் செய்தால், குறைந்தது மூன்று நாட்களாகும். அதிகாரிகள் பெரும்பாலும், 'ஏசி' முதல் வகுப்பு பெட்டியில் தான் பயணிப்பர். இதற்கான கட்டணமும் அதிகம். இதையடுத்து, தென் மேற்கு ரயில்வே மண்டலம், தங்கள் அதிகாரிகள், அலுவல் ரீதியான பயணங்களை, விமானத்தில் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து, தென் மேற்கு ரயில்வேயின் பொது மேலாளர், அஜய் குமார் சிங் கூறியதாவது:டில்லியில், 2 மணி நேரம் மட்டுமே நடக்கும் ஆலோசனை கூட்டங்களுக்கு, அதிகாரிகள் ரயிலில் சென்று வர, குறைந்தது மூன்று நாட்களாகும். ரயிலில், 'ஏசி' வகுப்பில் சென்றால், கட்டணமும் அதிகம். இந்த துாரத்துக்கான ரயில் கட்டணம், விமான கட்டணத்தை விட அதிகம். நேரமும் மிச்சமாகும். எனவே, ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க, டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களுக்கு செல்லும் அதிகாரிகள், விமானத்தில் சென்று வர, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
05-ஆக-201907:47:36 IST Report Abuse
R Hariharan இது தவறு. they are willing to ask to travel plane instead of Train. How they will say the cost is more comparing to Plane. If so they should reduce the rate. Who will pay taxi charge etc to airport. If it will take 3 days then it is good . They will prepare details etc while travelling by train. Also they should reduce the running time or any other nate route to reach to Delhi.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
05-ஆக-201907:39:33 IST Report Abuse
ஆரூர் ரங் ரயில் பயணிகளுக்கு இடைஞ்சலாக இவர்களுக்கு எமெர்ஜென்சி கோட்டா என ஒதுக்கிவிடுகிறார்கள் பொதுமக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ..வீடியோ கான்பிரன்சிங் போன்ற வசதிகள் இருக்கும்போது பயணங்கள் இவ்வளவு தேவையில்லை .அடிக்கடி அலுவலகப் பயணம்போவது சொந்தவேலைக்காக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஆக-201900:19:17 IST Report Abuse
 Muruga Vel ஏர்போர்ட்டுக்கு போக வர டாக்சி வாடகை அதிகம் ஆச்சே ...ரெயிலில் இடம் காலியா இருந்தா அதில் பயணம் செய்ய வற்புறுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X