அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேலூரில் இன்று ஓட்டுப்பதிவு

Added : ஆக 04, 2019
Advertisement

வேலுார் : வேலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.தேர்தல் பாதுகாப்பு பணியில் 20 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் ஈடுபட உள்ளனர். ஓட்டு இல்லாத வேட்பாளர்கள் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் காட்பாடியைசேர்ந்தவர். அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குள் வரும் அங்கு கடந்த முறை ஓட்டு போட்டு விட்டார். அதேபோல அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகத்தின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளது. கடந்த முறை ஆரணி லோக்சபா தொகுதியில் அவர் ஓட்டு போட்டு விட்டார்.

ஆந்திர ரவுடிகள் நுழைய தடை ஆந்திர மாநிலம் சித்துாரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து வாக்காளர்களை மிரட்டி ஓட்டு போடச் செய்து சிலர் கலவரம் ஏற்படுத்தலாம் என்ற தகவல் போலீசாருக்கு வந்துள்ளது. இதையடுத்து சித்துார் மாவட்ட ரவுடிகள் வேலுாரில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X