விலகியவர்களால் கட்சிக்கு சேதாரம் இல்லை: தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விலகியவர்களால் கட்சிக்கு சேதாரம் இல்லை: தினகரன்

Added : ஆக 04, 2019

சென்னை : ''அ.ம.மு.க.வில் இருந்து விலகியவர்களால் கட்சிக்கு எந்த சேதாரமும் இல்லை'' என அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் பேசினார்.

பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அ.ம.மு.க.வில் இணையும் விழா சென்னை வானகரத்தில் நேற்று நடந்தது. இதில் தினகரன் பேசியதாவது: மத்தியில் ஆள்பவர்கள் துணையுடன் இந்த ஆட்சியும் காட்சியும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது தமிழக மக்கள் விரும்பாத ஆட்சி. மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் அ.ம.மு.க. அழிந்து விடும் என்று நினைத்து சில நிர்வாகிகள் விலகிச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களால் கட்சிக்கு எந்த சேதாரமும் இல்லை. அவர்கள் சுயநலத்திற்காக சென்றனர்; தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க.விற்கு எந்த தொடர்பும் இல்லை. நமக்கு தி.மு.க. எதிரி என்றால் அ.தி.மு.க. துரோகி. அவர்களுடன் அ.ம.மு.க.வினர் உறவு வைத்து கொள்ளக்கூடாது, என்று அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X