விவசாயிகளுக்கு ஓய்வூதியம் திட்டம் விரைவில் துவக்குகிறார் பிரதமர்

Added : ஆக 04, 2019
Advertisement

புதுடில்லி : விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் துவக்கி வைக்கவுள்ளார். திட்டத்திற்காக தமிழகத்தில் 28 லட்சம் விவசாயிகள் சேர்க்கப் பட்டுள்ளனர்.

வறட்சி இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நஷ்டத்திற்கு உள்ளாகும் விவசாயிகள் விரக்தியில் தற்கொலை செய்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண விவசாயி களை உற்சாகப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் துவக்கி வைக்க உள்ளார். தமிழகத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறையினர் ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஓய்வூதிய திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள விவசாயிகள் சேர்த்து கொள்ளப்படுவர். இதில் 30 வயது வரை உள்ளவர்கள் 150 ரூபாய்; 40 வயது வரை உள்ளவர்கள் 200 ரூபாயை மாதம்தோறும் கட்ட வேண்டும். இவர்களுக்கு 60வயதுக்கு பின் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

பிரதமரின் பெயரில் எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனம் வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும். இதற்காக தமிழகத்தில் முதற்கட்டமாக 28 லட்சம் சிறு குறு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் தலையீடு இல்லாமல் தகுதியான விவசாயிகளை இத்திட்டத்தில் சேர்ப்பதற்கு வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X