அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

Added : ஆக 05, 2019
Advertisement
  பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

வானுார்:திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பேரூராட்சி பா.ம.க., சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு, பேரூராட்சி செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தனுசு, முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் வரவேற்றனர்.இதில், மாநில துணை தலைவர் சங்கர், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தருமன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் முத்துகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், சமூக முன்னேற்ற சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கசாமி, ஒன்றிய செயலாளர் முத்துகுமரன், பேரூராட்சி நிர்வாகிகள் கணேசன், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.திருச்சிற்றமலம் பகுதியில் கட்சி கொடி ஏற்றுவது, வரும் 11ம் தேதி திண்டிவனத்தில் நடக்கும் நிறுவனர் ராமதாஸ் மணிவிழாவில் கட்சியினர் பங்கேற்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X