எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பதவி?
நடிகையர் லதா, விந்தியாவுக்கு
அ.தி.மு.க.,வில் முக்கிய பதவி?

'அ.தி.மு.க.,வின், துணை கொள்கை பரப்பு செயலர்களாக, நடிகையர் லதா, விந்தியா நியமிக்கப்படலாம்' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகையர் லதா, விந்தியாவுக்கு அ.தி.மு.க.,வில் முக்கிய பதவி?


மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆரால், சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட கதாநாயகி, லதா. அ.தி.மு.க.,வின் ஆரம்ப கால உறுப்பினர். எம்.ஜி.ஆர்., மற்றும் ரஜினியுடனும் ஜோடியாக நடித்துள்ளார். அ.தி.மு.க.,வில் உள்ள அவர், லோக்சபா தேர்தலில், கட்சி வேட்பாளர்களை

ஆதரித்து பிரசாரம் செய்தார். ஆனாலும், வேலுார் லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு, அவரை அனுப்பவில்லை.

அதிருப்தியில் உள்ள அவர், நடிகர் ரஜினி கட்சி துவக்கினால், அதில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனவே, அவருக்கு துணை கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்படும் என, தெரிகிறது. வேலுார் பிரசாரத்திற்கு, நடிகை விந்தியா அனுப்பி வைக்கப்பட்டார். அவரது பேச்சு, பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், விந்தியாவுக்கும், துணை கொள்கை பரப்பு செயலர் பதவி வழங்கப்படலாம்.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க.,வில், துணை கொள்கை பரப்பு செயலர் பதவி, மறைந்த நடிகர், எஸ்.எஸ்.சந்திரனுக்காக உருவாக்கப்பட்டது.

Advertisement

அவரது மறைவுக்கு பின், அப்பதவிக்கு, பேச்சாளர் சம்பத் நியமிக்கப்பட்டார். தற்போது, துணை கொள்கை பரப்பு செயலர்களாக, முன்னாள் அமைச்சர்கள், வைகை செல்வன், பொன்னுசாமி, செ.மா.வேலுச்சாமி ஆகியோர் உள்ளனர். கூடுதலாக, லதா, விந்தியா இருவருக்கும், அப்பதவியை வழங்க, கட்சி மேலிடம் ஆலோசித்துள்ளது. இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
05-ஆக-201915:25:14 IST Report Abuse

முதல் தமிழன்Thiyaga semmalgal..

Rate this:
ramesh - chennai,இந்தியா
05-ஆக-201909:37:05 IST Report Abuse

rameshஉருப்படும் . கட்சியில் வேறு ஆட்களே இல்லையா.

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
05-ஆக-201908:48:51 IST Report Abuse

C.Elumalaiமேடைபேச்சில் நெத்தியடி அடித்து,பேசும் வக்கனைக்கு வக்கனையாகுவும், வீண்பழி பேசும் எதிரிகளுக்கு, பேச்சில் சவுக்கடி கொடுக்கும், விந்தியாவுக்கு,பதவி தரலாம்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X