முதல்வர்-அமைச்சர் மோதல் போக்கு மக்கள் நீதி மையம் கண்டனம்

Added : ஆக 05, 2019
Advertisement

புதுச்சேரி:முதல்வர், அமைச்சருக்கு இடையிலான மோதல் போக்கால், அரசு நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் அதிகாரிக்கும் என மக்கள் நீதி மையம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:மாநிலம் முன்னேற்றம் அடைய முதல்வர், அமைச்சர்கள் ஒற்றுமை மிக அவசியம். புதுச்சேரியில் ஏற்கனவே அரசுக்கும், கவர்னருக்கும் ஒற்றுமை இல்லாததால், பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.புதுச்சேரி வளர்ச்சி ஏற்பட கவர்னர், முதல்வர் இணைந்து செயல்பட வேண்டும்.இந்நிலையில், மாநில முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இதனால், ஏற்கனவே இரு பிரிவாக உள்ள அரசு அதிகாரிகள் தற்போது மூன்று பிரிவாக உருவாகுவர். இந்த பிரிவு, அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் உள்ளிட்டவற்றை அதிகரிக்க செய்யும்.அமைச்சரவையில் உள்ள மோதல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும். மக்கள் நலன் கருதி மோதல் போக்கை முதல்வரும் அமைச்சரும் கைவிட வேண்டும். கைவிட முடியாதவர்கள் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X