காஷ்மீ்ர்; மிரளும் அரசியல் கட்சியினர்

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (64)
Share
Advertisement

ஜம்மு: மத்திய அரசின் முழுப்பார்வையும் தற்போது காஷ்மீர் பக்கம் திரும்பி உள்ளதால் மாநில எதிர்கட்சியினர் மிரண்டு போயுள்ளனர். காஷ்மீரில் நாளுக்கு நாள் ஏதேனும் மாற்றம் நடக்குமோ என்ற நிலை இன்று வெளிச்சத்திற்கு வந்தது.latest tamil news
ஜம்மு காஷ்மீரில் படைகள் குவிப்பு, ஜம்மு தனி மாநிலம், யூனியன் பிரதேசமாக மாற்றம் என பல பிரச்சனைகள் எழுந்துள்ளது. அமர்நாத் யாத்திரை ரத்து, விடுதியில் தங்கும் நபர்கள் வெளியேற்றம் என பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கவர்னரை சந்தித்து விளக்கம் கேட்டனர்.

நேற்று ( 4 ம் தேதி) உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதுகாப்பு தேசிய செயலர் தோவல் மற்றும் உள்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் காஷ்மீரில் பாதுகாப்பை பலப்பபடுத்துவது மற்றும் தலிபான் , ஜிகாத் பயங்கரவாதிகளை அழிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.


latest tamil news

வீட்டுக்காவலில் உமர், மெகபூபாநேற்று ( 4ம் தேதி ) நள்ளிரவு முதல் காஷ்மீரில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ள நேரத்தில் மேலும் எதிர்கட்சி தலைவர்கள் உமர், மெகபூபா, காங்கிரஸ் , இடதுசாரி மற்றும் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு, ஸ்ரீநகரில் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


பிரதமர் முக்கிய ஆலோசனைஇதற்கிடையில் இன்று லோக்சபாவில் காஷ்மீர் விவகாரத்தை எதிர்கட்சியினர் எழுப்பினர்.

காஷ்மீரில் அமலில் உள்ள அரசியலமைப்பு சட்டம் 370 மற்றும் 35 ஏ பிரிவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த மாற்றம் வந்ததால் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும், வியப்பிலும் அரசியல் கட்சிகள் ஆழ்ந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Coimbatore,இந்தியா
06-ஆக-201900:24:16 IST Report Abuse
Rajan உலக வரலாறு காணாத கண்ணியமான "களையெடுப்பு" என்றால் அது இதுதான் .
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
05-ஆக-201915:08:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிரமாதம் மோடிஜி அவர்களே keepitup
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-ஆக-201913:05:40 IST Report Abuse
Lion Drsekar மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற பெயரில் சுதந்திரம் பெற்றது முதல் தனிப்பட்ட குடும்பங்கள் இவர்கள் வாழ, பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை சூறை ஆடிக்கொண்டு அழித்துக்கொண்டு வந்தாரா. நடக்க முடியாவிட்டாலும், பேச முடியாவிட்டாலும், கண் தெரியவில்லை என்றாலும், மூச்சு மட்டுமே இருந்தாலும் சம்பளம், ஆடம்பர பங்களா என்று மக்களின் வரிப்பணத்தில் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த நல்லவர்களிடம் இருந்து இந்த நாட்டை மீட்டுள்ளனர். குறிப்பாக சொல்லவேண்டுமானால் பாகிஸ்தான் நாடு என்பது நம் சகோதரர்களே. ஆனால் இந்த குடும்பத்தினர்கள்தான் இரண்டாக பிரித்து விட்டனர். இன்று நாம் அனைவரும் ஒருவரே என்று நிரூபித்து விட்டோம், இதே போன்று நம்மை பிரித்தாளும் குடும்பங்களுக்கு அப்பு வைத்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X