புதுடில்லி : காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் சட்டப்பிரிவு 35 ஏ-ஐ மற்றும் 370-ஐ ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் பகல் 12 மணியளவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை தரும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகளை நீக்கும் மசோதாவை அமித்ஷா ராஜ்யசபாவில் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தனர். 12 மணிக்கு லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

பா.ஜ., எம்.பி.,க்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ., கொறடா உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE