பொது செய்தி

இந்தியா

காஷ்மீரை பிரிக்க காரணம்: அரசு விளக்கம்

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement


புதுடில்லி: காஷ்மீர் தொடர்பாக 3 முக்கிய அறிவிப்புக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் இன்று (ஆக.5) வெளியிட்டார்.



latest tamil news



அமித்ஷா வெளியிட்ட 3 அறிவிப்புக்கள் :



* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து.

*ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.

* லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்.
காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு தினம் என மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.


latest tamil news



பிரிப்பு ஏன் - அமித்ஷாவின் விளக்கம் :



காஷ்மீர் பிரிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது ஏன் என அமித்ஷா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.


latest tamil news



அதில், மக்கள் தொகை குறைந்த, செல்வதற்கு கடினமான பெரிய பகுதி லடாக் என்பதால் அதை கையாள்வதும் கடினமானது. யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது லடாக் மக்களின் நீண்ட கால கோரிக்கை. மக்களின் விருப்பத்தையும், நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாக்கப்பட உள்ளது. சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீர் செயல்படும். இவ்வாறு அமித்ஷா அளித்துள்ள விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
06-ஆக-201916:55:33 IST Report Abuse
arabuthamilan ற்போதைய நிலையில் இந்தியாவின் இரும்பு மனிதர் யார் என்றால் " அமித்ஷா" சொல்லலாம். அவர் காஷ்மீர் விஜயம் செய்யும் போது 12 அடுக்கு பாதுகாப்புடன் செல்வது அவர் உயிருக்கும் உடமைக்கும் முழு பாதுகாப்பு. கொஞ்சம் கூட யாரையும் நம்பாமல் கிட்ட அனுக விடாமல் செயல் ஆற்ற வேண்டும். ஏனெனில் இந்தியாவின் பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கும், அமித்ஷா அவர்களுக்கு தீவிரவாதிகளால் என்றைக்கும் உயிருக்கு ஆபத்து. தீவிரவாதிகள் இவர்கள் இருவரையும் எப்போ " போட்டு தள்ளளாம் என்று ஒவ்வொரு விணாடியும் கண் கொத்துகிற பாம்பு போல் கண்காணித்து வருகின்றனர். ஆகவே மிகவும் உஷாராக இருக்க வேண்டும். சில வேலையில் மெய்காப்பாளர்களே, முன்னால் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டு கொன்றது போல், செயல் பட கூடும்.... சரியாகச் சொன்னீர்கள். ஏனென்றால் இவர்கள் எல்லோரும் மக்களால் ஒட்டுக்குப்போட்டு தெரிந்தெடுக்கப்படாமல் கள்ள ஓட்டுல பதவிக்கு வந்ததினால் இந்தியாவின் எந்த மூலைக்குப் போனாலும் கையோடு பேதி மாத்திரைகளோடு போக வேண்டிய சூழ் நிலை.
Rate this:
sankar - Nellai,இந்தியா
08-ஆக-201910:23:38 IST Report Abuse
sankarஅரபுத்தமிழன் வயிற்றெரிச்சல் புரிந்துகொள்ளக்கூடியதே...
Rate this:
Cancel
Krish - Chennai,இந்தியா
06-ஆக-201901:29:36 IST Report Abuse
Krish அமிட்ஷா , தாங்கள் வல்லபாய் படேல் போல திறமை வாய்ந்தவர் . இந்தியாவின் பொற்காலம் இது ..
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
05-ஆக-201921:11:54 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பாண்டி ச்சேரிபோல செயல்படட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X