பொது செய்தி

இந்தியா

பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவு

Updated : ஆக 05, 2019 | Added : ஆக 05, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி : காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காஷ்மீரில் ராணுவம் மற்றும் விமானப்படை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுள்ளது.



latest tamil news



இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி, உச்சபட்ச உஷார் நிலையை அமல்படுத்தும்படி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், டிஜிபி.,க்கள், டில்லி போலீஸ் கமிஷனருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு படைகள் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புக்களை பயன்படுத்தி, அனைத்து மாநிலங்களிலும் உஷார் நிலையை அமல்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


latest tamil news



அனைத்து மாநிலங்களில் அமைதி நிலவ சிறப்பு கவனம் எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக காஷ்மீரில் உள்ள வீடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு படிக்க வந்திருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
05-ஆக-201920:02:45 IST Report Abuse
Krish நம் சிதம்பரம் குதிக்கிறாரே இந்த மாதிரி அவர் குதித்து இருந்தால் புலிகளுக்கும் லங்கா படைகளுக்கும் இடையில் சிக்கிய ஸ்ரீ லிங்காவின் அப்பாவி தமிழர்கள் பல ஆயிரம் கொல்ல படுவதை தடுத்து இருக்கலாம்
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
05-ஆக-201916:27:53 IST Report Abuse
ANANDAKANNAN K தேசத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை சட்டத்தின் முன் நிற்கவைக்க வேண்டும், கலவரத்தை தூண்டும் விதமாக பேசினால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும், கலவரம் செய்பவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும், நமக்கு தேவை நாட்டின் நலன், குலாம், வைகோ , சிவா போன்றவர்கள் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ராஜ்ய சபாவில் பேசுவதை டிவி மூலம் பார்க்க முடிகிறது, இதனால் தான் இவர்கள் மக்களவைக்கு தேர்தெடுக்க முடியாத அளவிற்கு தோற்கடிக்க படுகின்றனர் இதை புரியவேண்டும் முதலில் வைகோ, வெறும் ஓட்டு வங்கிக்கு மட்டுமே இவர்கள் கூச்சல் போடுகின்றனர், மேலும் இவர்களால் வேறு எந்த பயனும் இந்த சிறுபான்மை மக்களுக்கு இல்லை, கூச்சல் போடுவதை விட்டு விட்டு குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம்.இந்த மூவரும் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று சிந்தித்து பார்த்தால் பூஜ்யம் ஒன்றே மிஞ்சும், ஒழிக்க பட வேண்டும் பிரிவினை, வளர்க்க விடும் தேச ஒற்றுமை.
Rate this:
Cancel
Bharatha Nesan - Chennai,இந்தியா
05-ஆக-201916:25:25 IST Report Abuse
Bharatha Nesan பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கிட்டதடட அரைப்பகுதி காஷ்மீரை விட்டு விட்டு சட்டவிரோத பாகிஸ்தான் குடியேறிகளை 1947 ல் வகுத்த எல்லைக்கோட்டுக்கு அப்பால் ஓடவைக்க வேண்டும், இல்லையெனில் சுட்டு வீழ்த்தி காஷமீர் ராஜா சிங் சிங் 1947 ல் இந்தியாவிடம் ஒப்படைத்த நிலப்பகுதிகளை மீட்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X