பணம் கறப்பதில் 'கறார்' போலீசு... 'சவுத்' எம்.எல்.ஏ.,வோட ஒரே தமாசு!

Added : ஆக 06, 2019 | |
Advertisement
''ஸ்வீட் எடு கொண்டாடு... இந்தா மித்து, ஜாங்கிரி சாப்பிடு,'' என்றவாறு, பெரிய பாக்கெட்டை நீட்டினாள் சித்ரா.''அக்கா... என்ன விஷயம் சொல்லுங்க. ரொம்ப ஜாலியா இருப்பீங்க போல,''''ஏய்... நிஜமாலுமே, உனக்கு ஒண்ணும் தெரியாதா? சரி.. பரவாயில்லை. நானே சொல்லிடறேன். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை, நேற்று ரத்து பண்ணிட்டாங்க தெரியுமா. இதனால், 55 ஆண்டு கால பிரச்னை ஒரு முடிவுக்கு வருமுன்னு
பணம் கறப்பதில் 'கறார்' போலீசு... 'சவுத்' எம்.எல்.ஏ.,வோட ஒரே தமாசு!

''ஸ்வீட் எடு கொண்டாடு... இந்தா மித்து, ஜாங்கிரி சாப்பிடு,'' என்றவாறு, பெரிய பாக்கெட்டை நீட்டினாள் சித்ரா.''அக்கா... என்ன விஷயம் சொல்லுங்க. ரொம்ப ஜாலியா இருப்பீங்க போல,''''ஏய்... நிஜமாலுமே, உனக்கு ஒண்ணும் தெரியாதா? சரி.. பரவாயில்லை. நானே சொல்லிடறேன். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை, நேற்று ரத்து பண்ணிட்டாங்க தெரியுமா. இதனால், 55 ஆண்டு கால பிரச்னை ஒரு முடிவுக்கு வருமுன்னு எதிர்பார்க்கலாம்,''''அக்கா... ரியலி கிரேட். ஆனா, எப்ப இருந்து, நேஷனல் லெவல் இஷ்யூக்கு போனீங்க,''

''அட... இதெல்லாம் ரொம்ப முக்கியமான விஷயங்கிறதால, தெரிஞ்சு வைச்சுக்கோணும், புரியுதாடி?''''ஓ.கே..க்கா.. ஏக்கா., ஒரு 'வாட்ஸ் ஆப்' தகவலால் குழப்பம் ஆயிடுச்சாம்,''''அப்படி என்னடி, வில்லங்கமான தகவல் வந்துச்சு?''''அங்கீகாரமில்லா வீட்டுமனை வரன்முறை சம்பந்தமா, சி.எம்., சட்டசபையில ஒரு அறிவிப்பு வெளியிட்டாரு. ஏற்கனவே ஒரு மனையாவது வரன்முறை செஞ்சிருந்தா, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், கட்டணம் வசூலிச்சுட்டு, மத்தவங்களுக்கு வரன்முறை செய்து கொடுக்கலாம்னு சொல்லியிருந்தாங்க''''அதை சரியா புரிஞ்சுக்காம, வீட்டுமனை வரன்முறை செய்ய கால நீட்டிப்பு செஞ்சதுக்கு நன்றி சொல்லி, 'வாட்ஸ் ஆப்' குரூப்ல, நம்ம 'சவுத்' போஸ்ட் பண்ணிட்டாரு.

இதை நம்பிட்டு, போனவங்களை, தவறான தகவல்னு சொல்லி, அதிகாரிகள் திருப்பி அனுப்பிச்சாங்களாம்,''''அவசரப்பட்டா... இப்டித்தான் ஆகும். இதே வேற ஏதாவது சென்சிட்டிவ் மேட்டர்னா, இந்நேரம் என்ன ஆயிருக்கும். சொல்லு மித்து.''''உண்மைதாங்க. பொதுமக்கள் விஷயத்தில், 'சவுத்' கொஞ்சம் நிதானமா நடந்துக்கணும்,'' என்று மித்ரா சொல்லவும், உள்ளே வந்த மித்ராவின் அம்மா, ''ரொம்ப உடம்பு அசதியா இருக்கு. டாக்டர் கிட்ட போயிட்டு வந்திடறேன்'', என புறப்பட்டார்.

''ஆன்ட்டி, ஒரிஜினல் டாக்டரான்னு செக் பண்ணிட்டு போங்க...'' என, சித்ரா கூற, ''ஓ.கே., சித்ரா,'' என்று முனகியவாறு, அவர் புறப்பட்டார்.''ஏங்க்கா, ஏதாவது போலி டாக்டர் விவகாரமா?'' மித்ரா ஆர்வமானாள்.''யெஸ் மித்து. 'போலி' டாக்டர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, கலெக்டர் தலைமையில, மாவட்ட நிபுணர் குழுன்னு ஒண்ணு இருக்கு. ஆனா, ஒரு வருஷமாவே, இந்த குழு எங்கேயுமே, ரெய்டு போகலையாமா?''''இத்தனைக்கும் திருப்பூரிலும், ரூரல் பகுதியிலும் போலி டாக்டர் சுதந்திரமா வைத்தியம் பார்த்துட்டு இருக்காங்களாம். இதெல்லாம், கலெக்டருக்கு தெரியுமான்னு, நமக்கு தெரியலையே..!''

''ஆமாங்க்கா... நானும்கூட கேள்விப்பட்டேன். இந்த வஞ்சிபாளையத்துக்கு பக்கத்தில, ஒரு போலி டாக்டர், பல வருஷமா டாக்டர் வேலை பார்க்கிறாராம். ஆனா, ெஹல்த் டிபார்ட்மென்ட் அதிகாரிகள், துாக்க மாத்திரை போட்டுட்டு துாங்குறாங்க போல,'' என்று கூறி சிரித்த மித்ரா, சமையலறைக்குள் சென்று, டீ தயாரிக்க ஆரம்பித்தாள்.,அங்கே சென்ற சித்ரா, ''மித்து? லிங்கேஸ்வரர் ஊரிலுள்ள கவர்மென்ட் ஹாஸ்டலில், தண்ணீர் தொட்டியை, அங்கு தங்கியுள்ள ஸ்டூடண்டை வைத்தே சுத்தம் செய்ய சொல்லி உள்ளனர். இது வெளியே கசிந்த நிலையில், அங்குள்ள வார்டன், 'ஏதாவது வெளியே சொன்னீங்க, நடக்கறதே வேறனு, மிரட்டிட்டாங்களாம்?'' என்றாள்.

''இதென்னங்க்கா.. கொடுமையா இருக்கு? இத்தனை அதிகாரிங்க இருந்தும், ஒருத்தர் கூட கண்டுக்கலையா?''''அவங்க எங்க கண்டுக்கறாங்க...? சில அதிகாரிகள் தங்களை அரசராவே நினைச்சுக்கறாங்க? இந்த டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்டில் கூட ஒரு பிரச்னை புதுசா கிளம்பியிருக்கு?''''என்னக்கா, பிரச்னை?''''திருப்பூர், பல்லடம் கிளை டிப்போவிலிருந்து, தலா பத்து பேரும், பழநியிலிருந்து, 20 பேரும் திடீரென வெவ்வேறு கிளைகளுக்கு டிரான்ஸ்பர் செஞ்சாங்க. இவங்களை, மீண்டும் பழைய இடத்துக்கே வர, 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசறாங்களாம்,''''யாருக்கா பேசறாங்க?''''வேற யாரு. எல்லாம் ஆளுங்கட்சி தொழிற்சங்க பிரமுகர்கள்தான். வேறு வழியின்றி, மற்ற கட்சி தொழிற்சங்கத்தினரும், அவங்ககிட்ட போக வேண்டியுள்ளது, என சலித்து கொள்கின்றனர்,'' என்றாள் சித்ரா.

அதற்குள், டீ தயாராகவே, இருவரும் ஹாலில் அமர்ந்தனர். டீயை குடித்து கொண்டே, ''சிட்டியில் பல இடங்களில் சேவல் கூவுது. ஆனா, நம்ம போலீஸ்காரங்க கண்டுக்கிட்ட மாதிரி தெரியலையே...!'' என்றாள் சித்ரா.''என்னக்கா சொல்றீங்க. ப்ளீஸ் புரியற மாதிரி சொல்லுங்க...'' என்றாள் மித்ரா.''அவசரப்படாதடி. வஞ்சிபாளையம், கணியாம்பூண்டி, தோட்டத்துப்பாளையம், பாண்டியன் நகர், இப்படி சிட்டி லிமிட்டில், பல இடங்களில், சேவல் சண்டை ஜோரா நடக்குதாம். அந்தந்த ஸ்டேஷனுக்கு கரெக்டா 'ப' சப்ளை பண்ணிடறாங்களாம்,''

''இதில என்ன கொடுமைன்னா, கமிஷனர் ஆபீசுக்கு பக்கத்தில இருக்குற, ஸ்டேஷன் லிமிட்டில், சேவல் கூவிட்டே இருக்குதாம்டி''''நல்லாவே கூவட்டும், அங்கே சேவல்ன்னா, இங்கே, பேக்கரியில் வசூல் பின்றாங்களாம்ங்க்கா...''''எந்த ஸ்டேஷன்?''''இப்ப புதுசா ஆரம்பித்த ஸ்டேஷன்தான். ராத்திரியில், பேக்கரியில் வியாபாரம் செய்ய, மாசாமாசம் கப்பம் கட்டோணுமாம். அப்படி கட்டினாலும், நைட் டியூட்டி வர்ற போலீஸ்காரங்க தனியா, 'வாங்கி'க்கிறாங்களாம்க்கா,''.

''அட...இதையெல்லாம் தாண்டி, ரூரல் லிமிட்டில், மாட்டை புடுச்சு நல்லா, கல்லா கட்டுறாங்களாம்?''''என்னக்கா.. இன்னைக்கி, சேவல், மாடுன்னு, ஒரே அனிமல்ஸ் மேட்டரா வருது,''''அதனால, என்ன, இதைக்கேளு. திருப்பூரில், வாராவாரம், 'மண்டே' அன்னிக்கு, மாட்டுச்சந்தை நடக்குது. சந்தைக்கு மாடு கொண்டு வர்ற பல விவசாயிகள், காங்கயம், பல்லடம், அவிநாசிபாளையம் தாண்டி திருப்பூருக்கு வர்றதுக்குள்ள, மூன்று இடங்களில் கறாராக வசூலிக்கிறாங்களாம்,''''யாருங்க்கா வசூல் பண்றது?''

''யாரு பண்ணுவா? அந்தந்த மூணு ஊரு ஸ்டேஷன் போலீஸ்தான். ஒவ்வொரு இடத்திலும், 100 முதல், ஆயிரம் வரை 'பைன்' போடறாங்களாம். இதுசம்மந்தமாக, விவசாயிகள், உயரதிகாரிகள்கிட்ட சொல்லியும், ஒரு பிரயோஜனமும் இல்லையாம்,'' என்ற சித்ரா மீண்டும் அடுத்த ரவுண்ட் டீ குடித்தாள்.அதன்பின், ''மித்து, அனிமல்ஸ் வரிசையில், இந்த ஆடு மேட்டரையும் கேட்டுக்கோ...''''ம்...ம்...சொல்லுங்க...!''''ஏற்கனவே, பேசுன கமிஷனர் ஆபீசுக்கு பக்கத்தில இருக்கற பகுதியில் கறிக்கடை வச்சிருக்கிற ஒருத்தரோட ஆடு அடிக்கடி திருட்டு போச்சாம். அவரும் பலமுறை கண்காணிச்சதில், பக்கத்து கடையில இருக்கிற 'சிசிடிவி'யில், திருடன் உருவம் பதிவாயிடுச்சு.

அந்த 'புட்டேஜ்' கொண்டு போய், '....பாளையம்' இன்ஸ்.,கிட்ட காண்பிச்சிருக்கிறார்,'' ''அப்புறமென்ன... எவிடென்ஸ் இருக்கு. கேஸ் போட வேண்டியதுதானே,''''இல்லையே. ஆடுகளை பறி கொடுத்தவரை, ஸ்டேஷனில் வச்சு, அவமதிச்சு, அனுப்பிச்சிட்டாராம். அதோடில்லாம, 'நீ.... என்ன, பெரிய சி.ஐ.டி., போலீசா? விசாரணை பண்ணிட்டு வந்து சொல்றயா? புறம்போக்குல கடை வெச்சுட்டு, ரொம்ப ஆடாதேன்னு, திட்டவும் செஞ்சாராம். இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்ட, 'வேவு' பிரிவும், மேலிடத்துக்கு எதுவும் சொல்லலையாம்?''''என்ன கொடுமை 'சரவணன்'சார்னு, சிவாஜி மாதிரி கேட்கலாமுன்னு தோணுதுங்க்கா...''

''சரி விடு. நீ டென்ஷன் ஆகாதே. அவங்கெல்லாம், ராஜா மாதிரிதான் இருப்பாங்க. கம்ப்ளைன்ட் கொடுக்கற மக்களை என்னைக்கு மதிக்கிறாங்களோ, அன்னைக்குத்தான் ஊரு நல்லாருக்கும்,'' என்ற சித்ரா, ''ஓ.கே.,மித்து. நான் கெளம்பறேன்,'' என்றபடியே புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X