சவுத்ரி பேச்சு: சோனியா, ராகுல் அதிர்ச்சி

Updated : ஆக 06, 2019 | Added : ஆக 06, 2019 | கருத்துகள் (56)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் அல்ல என லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளது, சோனியா, ராகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாக பிரிப்பதற்கான மசோதா நேற்று (ஆக.,5)
Sonia Gandhi, Rahul Gandhi, Sonia, Rahul, Congress Leader, Self-Goal, Kashmir,காஷ்மீர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அமித்ஷா, சோனியா, ராகுல்

புதுடில்லி: காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் அல்ல என லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளது, சோனியா, ராகுலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாக பிரிப்பதற்கான மசோதா நேற்று (ஆக.,5) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதா மீது பேசிய லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். 1994 ம் ஆண்டு லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. மாநிலத்தை யூனியன் பிரதேசமாக பிரிக்க, மத்திய அரசு அனைத்து விதிகளையும் தூக்கி எறிந்துவிட்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மத்திய அரசு சிந்திக்கவில்லை என நினைக்கிறேன். அனைத்து விதிகளையும் மீறி, மத்திய அரசு ஒரே நாள் இரவில், காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளது என்றார்.


latest tamil news




இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதில்: சவுத்ரி, பொதுவாக அறிக்கை வெளியிடக் கூடாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பிரிக்க முடியாத பகுதி. இதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சட்ட ரீதியாக பிரச்னை ஏதும் இல்லை. என்றார்,


latest tamil news




பின்னர் சவுத்ரி மீண்டும் பேசுகையில், காஷ்மீர் விவகாரம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறுவதால், எனக்கு சந்தேகம் வருகிறது. 1948 ம் ஆண்டு முதல், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா., கவனித்து வருகிறது. அப்படியிருக்கையில், இது உள்நாட்டு விவகாரமா? சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளதால், அது உள்நாட்டு விவகாரமா? அல்லது இரு நாட்டு பிரச்னையா? வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம் காஷ்மீர் விவகாரம் இரு தரப்பு விவகாரம். இதில் தலையிட வேண்டாம் எனக்கூறினார். இதற்கு மேலும், ஜம்மு காஷ்மீர் உள்நாட்டு விவகாரமாக நீடிக்கிறதா? இது குறித்து விளக்க வேண்டும் என்றார்.

அப்போது, அருகில் அமைந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா அதிர்ச்சி அடைந்தார். மகன் ராகுலை பார்த்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ராகுலும் அதிர்ச்சியடைந்து தலையை லேசாக அசைத்தார்.

சவுத்ரியின் இந்த பேச்சை கேட்ட பா.ஜ., உறுப்பினர்கள் அவமானம் என கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து சவுத்ரி பேசுகையில், அனைவரும் தவறாக நினைக்கிறீர்கள். உங்களை விழிப்பூட்டவே இதனை செய்துள்ளேன். இது அடிப்படை கேள்வி. இதனை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சி, உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறது என்றார். இது சோனியாவை மேலும் அதிர்ச்சியடைய வைத்தது.

இதற்கு பதிலளித்த அமித் ஷா, காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீங்கள் கருதவில்லையா? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. ஜம்மு காஷ்மீர் என நான் சொல்வது ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் சேர்த்து தான். ஆக்கிரமிப்பு காஷ்மீர், காஷ்மீருக்குள் வருகிறது என நினைக்காத உங்களை கண்டு எனக்கு கவலை தருகிறது. காஷ்மீருக்காக எங்களது உயிரையும் தர தயாராக உள்ளோம் என்றார்.

லோக்சபாவில் தனது பேச்சு குறித்து சவுத்ரி அளித்த விளக்கம்: எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசின் விளக்கத்தை தான் நான் கேட்டேன். அரசு இதனை ஒரு விவாதமாக மாற்றியுள்ளது என்றார்.

இதனிடையே டில்லி வட்டாரங்கள் கூறுகையில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது சோனியா, ராகுல் கடும் கோபத்தில் உள்ளனர். காலை நடந்த காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டத்தில், விவாதத்தில் பேசுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சவுத்ரி செய்த தவறு, விவாதத்தை வேறு திசையில் திருப்பியதுடன், காங்கிரசை அமித்ஷா விமர்சிக்க காரணமாகி விட்டதாக தெரிவித்தன.

காஷ்மீர் மசோதா குறித்த விவாதத்தில் பேசுவதில்லை என ராகுல் முடிவு செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathaiyyan - Kolkata,இந்தியா
07-ஆக-201915:53:02 IST Report Abuse
Loganathaiyyan காந்திஜியிடம் நேரு: காந்திஜி இங்கே பாருங்க நான் இந்தியா பிரதமர், எனது தம்பி முஹம்மதலி ஜின்னா பாகிஸ்தான் தலைவர், எனது இன்னொரு தம்பி அப்துல்லா காஷ்மீர் தலைவன் - இப்படி நீங்க தான் பிரிச்சி கொடுக்கணும் இல்லேன்னா எங்களுக்குள்ளே பெரிய சண்டையாயிடம்.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
07-ஆக-201913:49:10 IST Report Abuse
JSS பெங்காளிகளுக்கு என்றுமே புத்தி கொஞ்சம் கம்மிதான் ஆனால் எதோ மண்டை முழுதும் மூளை இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள். மண்டையில் இருப்பது களிமண் தான்
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
07-ஆக-201913:46:08 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த ஆதிர் ரஞ்சன் சவுதரி ஒரு தாதா இத்தாலி குடும்பத்தில் வேறு ஆளே கிடைக்கவில்லை என்றதால் இந்த புறம்போக்கை லோக் சபா காங்கிரஸ் கட்சி தலை ராக பப்புபாய் நியமித்தார் . இந்த ஆள் லோக் சபாவின் பாரம்பரியம் ,தரம் , கவுரவம் பற்றி ஒன்றும் அறியாதவர் . கூடிய சீக்கிரம் இந்த ஆள் பல்லை பிடிங்கிவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X