என்னை கொல்ல சதி: பரூக் அப்துல்லா அலறல்| I am under house arrest and they want to murder us: NC Chief Farooq Abdullah | Dinamalar

என்னை கொல்ல சதி: பரூக் அப்துல்லா அலறல்

Updated : ஆக 06, 2019 | Added : ஆக 06, 2019 | கருத்துகள் (74)
Share
ஜம்மு: மத்திய அரசு தன்னை கொலை செய்ய விரும்புவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர், மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா ஆகியோர், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து
house arrest, murder, NC Chief, Farooq Abdullah, காஷ்மீர், பரூக் அப்துல்லா, உள்துறை அமைச்சர், அமித்ஷா,

ஜம்மு: மத்திய அரசு தன்னை கொலை செய்ய விரும்புவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர், மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், ஒமர் அப்துல்லா ஆகியோர், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இவர்கள் இருவரும், நேற்று(ஆக.,5) அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், பரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை. அவரது வீட்டில் தான் தங்கியுள்ளார் எனக்கூறினார்.


latest tamil news
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா அளித்த பேட்டி: எங்கள் வீட்டு கதவு திறக்கப்பட்டதும், மக்கள் வெளியில் வந்து போராடுவார்கள். நாங்கள் கோர்ட்டிற்கு செல்வோம். நாங்கள் துப்பாக்கி ஏந்தி போராடுபவர்கள் அல்ல. கல் எறிபவர்கள் அல்ல. அமைதியில் நம்பிக்கை உள்ளவர்கள்.
மத்திய அரசு எங்களை கொலை செய்ய விரும்புகிறது. ஒமர் அப்துல்லா சிறையில் உள்ளார். நான் சிறையில் இல்லை. சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டிற்குள் உள்ளதாக பார்லிமென்டில் உள்துறை அமைச்சர் பொய் சொல்லியுள்ளார்.


latest tamil news
எங்கள் முதகில் குத்தாதீர்கள். நெஞ்சில் சுடுங்கள். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத நடவடிக்கை. ஜனநாயகம், மதச்சார்பற்ற இந்தியா தான் எனது இந்தியா. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X