பதிவு செய்த நாள் :
அயோத்தி வழக்கு, விசாரணை, சர்ச்சை, நிலம், சமரச தீர்வு

புதுடில்லி: அயோத்தி பிரச்னைக்கு சமரச தீர்வு காணும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று முதல் உச்ச நீதிமன்றத்தில் தினசரி விசாரணை துவங்கியது. 'கடந்த 1934ல் இருந்து சர்ச்சைக்குரிய இடத்தில் தொழுகை நடத்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் அந்த 2.77 ஏக்கர் நிலத்தை எங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்' என ஹிந்து அமைப்பான நிர்மோஹி அகாடா சார்பில் நேற்று வாதிடப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குஉரிய நிலம் தொடர்பான பிரச்னைக்கு சுமுக தீர்வு காண மத்தியஅரசு சமரச குழுவை அமைத்து. ஆனால் அந்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை தினமும் விசாரிக்க முடிவு செய்தது.

முதல் நாள் விசாரணை நேற்று துவங்கியது. அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய நிர்மோஹி அகாடா என்ற ஹிந்து அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுஷில் ஜெயின் வாதிட்டதாவது: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பல ஆண்டுகளாக எங்கள் அமைப்பிடம் தான் இருந்தது. கடந்த 1934ல் இருந்தே அங்கு தொழுகை

நடத்த முஸ்லிம்கள் அனுமதிக்கப்படவில்லை. நிர்மோஹி அகாடா பதிவு செய்யப்பட்ட அமைப்பு.

'சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை எங்களுக்கு தர வேண்டும்; அதை நிர்வகிக்கும் அனுமதியையும் எங்களுக்கே தர வேண்டும்' என்பதுதான் இந்த வழக்கில் நாங்கள் வைத்துள்ள அடிப்படை கோரிக்கை. எனவே சர்ச்சைக்குரிய நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.
கடந்த 1934ல் இருந்து 1949 வரை அந்த இடத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாக அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கமான தொழுகை நடந்ததாக அதில் தெரிவிக்கப்படவில்லை மேலும் தொழுகை

நடத்துவதற்கு முன் முஸ்லிம்கள் தங்களின் கை, கால்களை கழுவுதற்கான வசதி எதுவும் அந்த இடத்தில் இல்லை என்றும் அதனால் அங்கு தொழுகை நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கும் உயர் நீதிமன்றம் வந்துள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு அவர் வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'எழுதி வைத்து எடுத்து வந்த அறிக்கையை நீதிமன்றத்தில் படிக்க வேண்டாம்; இது 'சிவில்' வழக்கு. எனவே அதற்கு உட்பட்ட விவகாரத்தை மட்டும் வாதிடலாம்' என்றனர். அப்போது முஸ்லிம் அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ''வாதத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்காமல் இருப்பது நல்லது'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர் தவானுக்கும் இடையே காரசரமான வாக்கு வாதம் நீடித்தது. இதன்பின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தவான் நீங்கள் மூத்த வழக்கறிஞர். இந்த நீதிமன்றத்தின் மாண்பை பின்பற்ற வேண்டும். வாதத்துக்கு எந்தவித தடையையும் நாங்கள் விதிக்கவில்லை என்றார். இதையடுத்து வாதம் தொடர்ந்தது. இன்றும் விசாரணை நடக்கிறது.

அயோத்தி வழக்கு:


* உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ல் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது
* இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து ராம் லல்லா, நிர்மோஹி அகாடா, சன்னி வக்ப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும்' என 2010ல் தீர்ப்பளித்தது.
* இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை தான் தற்போது தினசரி விசாரணையாக நேற்று முதல் துவங்கியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (9+ 6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar vanniyan - Chennai,இந்தியா
07-ஆக-201918:42:58 IST Report Abuse

Ajit Kumar vanniyanஅது எப்புடி தீர்ப்பு வரும், அது வந்துட்டாள் அரசியல் நாடகம் எப்படி நடத்துவார்கள்,

Rate this:
oce - tokyo,ஜப்பான்
07-ஆக-201915:52:33 IST Report Abuse

oceபாகிஸ்தானில் ஒரு மசூதியை இடித்து விட்டு இந்து கோயிலை கட்ட அனுமதியுண்டா.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
07-ஆக-201915:43:10 IST Report Abuse

oceஇந்தியா என்னும் பெயர் யாருக்காக வந்தது. அதில் சிறுபான்மையினரின் லோகோஸ்டேண்டி நிலைமை என்ன. பிற நாட்டு மதங்களை சேர்ந்தவர்களுக்கு . இந்தியா நிரந்தர வாசஸ்தலமில்லை. இந்து கோயிலை இடித்து அதன் மேல் மசூதி கட்டியுள்ளனர். இது அநாகரிக செயல். ஏக் மார் தோ துக்கடா இதுதான் முசல்மான்களின் கோட்பாடு. உடனே முன்னர் இருந்தவாறே அதே கோயில் கட்ட கடகால் போடவேண்டும். கோர்ட்டை எல்லாம் நம்பி பிரயோசனமில்லை. மசூதி தேவை எனில் எங்காவது ஓரமாக போய் கட்டவேண்டியது தானே.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X