பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மலை தனியார்மயம் ரயில் ரயில்வே உயரதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 07, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
விருத்தாசலம்:'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள, நீராவி இன்ஜினில் இயக்கப்படும், ஊட்டி மலை ரயிலை, ரயில்வே போர்டு உறுப்பினர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், ஆய்வு செய்யஉள்ளனர்.ஊட்டி மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படும் மீட்டர் கேஜ் ரயில், பிரிட்டிஷ் ஆட்சியில், 1908ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ரயிலில், 46 கி.மீ., பயணித்து, ஊட்டியின் அழகை

விருத்தாசலம்:'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள, நீராவி இன்ஜினில் இயக்கப்படும், ஊட்டி மலை ரயிலை, ரயில்வே போர்டு உறுப்பினர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், ஆய்வு செய்யஉள்ளனர்.

ஊட்டி மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் இயக்கப்படும் மீட்டர் கேஜ் ரயில், பிரிட்டிஷ் ஆட்சியில், 1908ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ரயிலில், 46 கி.மீ., பயணித்து, ஊட்டியின் அழகை சுற்றுலாபயணியர் ரசிக்கின்றனர்.உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில், இமயமலையின் டார்ஜிலிங் ரயில், ஊட்டி மலை ரயில் ஆகியவற்றை, 2005, ஜூலை மாதம், 'யுனெஸ்கோ' சேர்த்தது.

இந்நிலையில், ஊட்டி மலை ரயில் இயக்கத்தை, தனியார் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை, ரயில்வே துறை துவக்கி உள்ளது.சேலம் கோட்ட ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜூலை, 30ல், சேலம் கோட்ட ரயில்வேமேலாளர் தலைமையில், 35 பேர் அடங்கிய குழுவினர், ஊட்டி மார்க்கத்தில், 13 ரயில் நிலையங்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, டில்லியில் உள்ள இந்திய ரயில்வே போர்டு உறுப்பினர், ரோலிங் ஸ்டாக் தலைமையிலான குழுவினர், ஊட்டி மலை ரயில் இயக்கம் குறித்து, ஆய்வு நடத்த உள்ளனர். அக்குழுவினர், 10ம் தேதி, டில்லியில் இருந்து, கோவை வருகின்றனர்.பின், சிறப்பு ரயில் மூலம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆய்வை துவக்குகின்றனர். 11ம் தேதி, தமிழக அமைச்சர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதில், இந்திய ரயில்வே துறையை, தனியார்மயமாக்குவதற்கான முன்னோட்டமாக, ஊட்டி மலை ரயிலை, தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, ஆய்வு செய்யப்பட உள்ளது.தொடர்ந்து, டார்ஜிலிங் உள்ளிட்ட மலை ரயில்களையும், தனியார் மயமாக்குவது குறித்து, முடிவு செய்யப்படும். மலை ரயில்கள் இயக்கத்தில், தனியார் மயம் வெற்றி பெற்றால், மற்ற ரயில்களையும் தனியார்மயமாக்குவது குறித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mupaco - Madurai,இந்தியா
07-ஆக-201915:26:40 IST Report Abuse
mupaco பெரிய செலவிலான திட்டங்கள் தனியார் ஒத்துழைப்போடு புதுமையான முயற்சிகள் போன்றவற்றை கொடுக்கலாம்.
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
07-ஆக-201915:24:46 IST Report Abuse
mupaco நல்ல வருமானம் உள்ள பாதையை கொடுக்க கூடாது. சேவை செய்யப்பட வேண்டிய , பிற துறை ஒத்துழைப்பு இல்லாத , பாதையை கொடுக்கலாம். தற்போது ஒரு வண்டி இயங்கும் நெல்லை , தென்காசி, விருதுநகர், காரைக்குடி, திருச்சி, சென்னை வண்டிப்பாதையில் மயிலாடுதுறையையும் சேர்த்து இயக்க அனுமதிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X