சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் ரூ.2 லட்சம் மதிப்பு பாலிதீன் பைகள் பறிமுதல்: வியாபாரிக்கு ரூ.10,500 அபராதம் விதிப்பு

Added : ஆக 07, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தேனியில் ரூ.2 லட்சம் மதிப்பு பாலிதீன் பைகள் பறிமுதல்: வியாபாரிக்கு ரூ.10,500 அபராதம் விதிப்பு

தேனி:தேனி கோடவுனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான பாலிதீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வியாபாரிக்கு ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.

தேனியில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு அதிகம் உள்ளது. கேரிபேக், டம்ளர், பாலிதீன் கவர் என அதிகளவில் சில்லரை வியாபாரிகள் புழக்கத்தில் விடுகின்றனர்.சிறு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்தாலும் மீண்டும் பயன்படுத்துகின்றனர்.நேற்று தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், தர்மராஜ், மாரிமுத்து, சக்திவேல், பாலமுருகன் ஆகியோர் கடற்கரை நாடார் தெருவில் சோதனை நடத்தினர். இங்கு வியாபாரி ராஜாராமிற்கு சொந்தமான கோடவுனில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஒன்றரை டன் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பதுக்கி இருந்ததை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்து மூடைகளை நகராட்சி லாரியில் ஏற்றினர். தடையை மீறி விற்பனை செய்த ராஜாராமிற்கு ரூ.10,500 அபராதம் விதித்தனர். தடை செய்யப்பட்ட பாலிதீன் விற்பனை செய்ய கூடாது எனவும், இரண்டாவது முறையாக இருந்தால் ரூ.25 ஆயிரமும், 3வது முறை கண்டுபிடித்தால் உரிமம்ரத்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தெரிவித்தார்.கூடலுார்: கூடலுாரில் நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மெயின்பஜார், காமாட்சியம்மன் கோயில் தெரு, குமுளி ரோடு உள்ளிட்ட பகுதியில் சிறு கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.ஒரு சில கடைகளில் பாலிதீன் பைகள், பாலிதீன் முலாம் பூசப்பட்ட பேப்பர் கப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. ஒரு முறை பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் மீண்டும் மறுமுறை பாலிதீன் பொருட்கள் இருந்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கமிஷனர் எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan k - madurai,இந்தியா
07-ஆக-201916:05:48 IST Report Abuse
kumaresan k சம்பந்த பட்டவர்களை தெருவில் கிடக்கும் பாலிதீன் பைகளை பத்து நாட்களுக்கு சேகரித்து தூய்மை படுத்தும் தண்டனையை கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X