ராமர் கோயில் கட்ட அமித்ஷா அதிரடி ஆக்சன் தயார்

Updated : ஆக 07, 2019 | Added : ஆக 07, 2019 | கருத்துகள் (99)
Share
Advertisement
ராமர் கோயில் :அமித்ஷா ஆக்சன் தயார்

புதுடில்லி: அமித் ஷா, அடுத்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:ராமர் கோவில்: ராமபிரான் பிறந்த இடமாக, ஹிந்துக்களால் கருதப்படும், உ.பி.,யின் அயோத்தி நகரில், ராமர் கோவில் கட்டுவது, பா.ஜ.,வின் தாரக மந்திரமாக உள்ளது.

அதற்கு லட்சக்கணக்கான சாதுக்களும், சன்னியாசிகளும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் விருப்பத்தை, அமித் ஷா விரைவில் நிறைவேற்றுவார் என, எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், எவ்வித தடாலடி நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. எனினும், பார்லிமென்டில், பா.ஜ.,வுக்கு இருக்கும், பெரும்பான்மையை வைத்து, சட்டம் இயற்றவும், வாய்ப்பு உள்ளது.


latest tamil news





சட்டவிரோத குடியேறிகள்:



நாட்டின் வட கிழக்கு மாநிலங்களுக்குள், அண்டை நாடான, வங்க தேசத்திலிருந்து, ஏராளமானோர், சட்ட விரோதமாக குடியேறியுள்ளனர். அவர்களை வெளியேற்ற, தேசிய குடிமக்கள் பதிவு முறை, விரைவில் முழு மூச்சாக பின்பற்றப்பட உள்ளது.அதுபோல, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு, இந்தியாவில் புனர்வாழ்வு அளிக்கும் வகையில், அமித் ஷாவின் அடுத்த அதிரடி நடவடிக்கை இருக்கும்.


போலீஸ் சீரமைப்பு


போலீஸ் துறையை சீரமைப்பது மிகவும் அவசியம் என, எல்லை பாதுகாப்புப் படையின் முன்னாள், டி.ஜி.பி., பிரகாஷ் சிங் வலியுறுத்தியுள்ளார். அவர் தெரிவித்துள்ள, ஐந்து பரிந்துரைகளாவன:
* போலீஸ் துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது
* ஆந்திராவில் உள்ளது போன்ற, 'கிரேஹாவ்ண்ட்ஸ்' எனப்படும், சிறப்பு அதிரடிப் படைகளை, ஒவ்வொரு மாநிலத்திலும் துவக்குவது

* அரசியல் தலைவர்களின் கைப்பாவையாக மாறாமல் இருக்க, சி.பி.ஐ.,க்கு சட்ட அந்தஸ்து அளிப்பது
* மஹாராஷ்டிராவில் இருப்பது போன்ற,'மொகொகா' எனப்படும்,பெரிய அளவிலான,கூட்டு குற்றங்களை தடுக்கும்சட்டங்களை இயற்றி, குற்றங்களை தடுப்பது

* மாநில பட்டியலில் உள்ள, போலீஸ் துறையை, இணை பட்டியலுக்கு கொண்டு வருவது என்பன போன்ற சீர்திருத்தங்கள் விரைவில் வர வாய்ப்பு உள்ளது.


ஒரே நாடு ஒரே தேர்தல்


மாநில சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும், வேறு வேறாக தேர்தல் நடப்பதை மாற்றி, நாடு முழுவதும், ஒரே தேர்தல் நடத்துவது, மோடி அரசின் குறிக்கோளாக உள்ளது.


நக்சல் ஒழிப்பு


பீஹார், ஆந்திரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா போன்ற, பல மாநிலங்களில், நக்சல் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. அதை ஒடுக்கும் விதமாக, அமித் ஷாவின் அடுத்த பார்வை அமையும்.இது போன்ற சீர்திருத்தங்களை, அமித் ஷா மேற்கொள்ள உள்ளார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-201921:56:12 IST Report Abuse
kulandhai Kannan வாயிலே வடை சுடுவார் என்று கொக்கரித்த கோமான்கள் இன்று வாயடைத்துப் போயுள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவ்வளவு நாளாக இருந்த 370ஐ உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல், பயங்கரவாதத்தை மட்டுமே நம்பியிருந்துவிட்டு இன்று குய்யோ முறையோ என்று கூவுவதில் ஒரு பயனுமில்லை. பயங்கரவாதத்திற்கு பயந்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த சமூகத்திற்கும் பின்னடைவுதான். ஈழம், தென் சூடான் இன்று காஷ்மீர். இங்குள்ள டுபாக்கூர் போராளீஸ் உணர வேண்டும் அல்லது உணர்த்தப்படவேண்டும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
07-ஆக-201921:04:17 IST Report Abuse
J.Isaac வண்டி அதிவேகமாக கட்டுப்பாடு இல்லாமல் சென்றால் விபத்து நடக்க வாய்ப்புண்டு . நீதிமன்றத்தை மக்களை ஏமாற்றலாம் . செய்த தவறுக்கு என்றாவது ஒருநாள் தண்டனை உண்டு . திருத்தினால் ஒருவேளை தப்பிக்கலாம் . எதிலும் நிதானம் வேண்டும் . கோவில் கட்டி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை விட மக்கள் இலவச கல்வி , மருத்துவம் போன்ற தானங்களை கொடுக்கலாம்
Rate this:
Cancel
mthahir - Kuwait,குவைத்
07-ஆக-201914:05:35 IST Report Abuse
mthahir ஒரு பருப்பும் வேகாது.
Rate this:
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
07-ஆக-201916:29:33 IST Report Abuse
Swaroopa Methaபாத்துக்கிட்டே இருடி. ஆப்பு வேகும்போது எந்த பருப்பு வேகும்னு தெரியும். அப்போ கூவரதுக்கு கூட வழியில்லாம கேப்புல ஒக்காத்தி வெச்சுட்டு வெந்த பருப்புல வடை சுடுவாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X