காஷ்மீர் பெண்ணை மணக்க பா.ஜ., எம்எல்ஏ., ஆசை

Updated : ஆக 07, 2019 | Added : ஆக 07, 2019 | கருத்துகள் (78)
Share
Advertisement

முஷாபர்நகர் : இனி வெள்ளையான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளதாக உ.பி., பா.ஜ., எம்.எல்.ஏ., விக்ரம் சிங் சைனி பேசி வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.latest tamil news


உ.பி.,யின் முஷாபர்நகரில் உள்ள கதவுலி பகுதியில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ., தொண்டர்கள் இடையே பேசிய எம்எல்ஏ., விக்ரம் சிங், காஷ்மீர் பெண்களை இனி திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதால் கட்சியில் திருமணம் ஆகாமல் இருக்கும் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு முன் பெண்கள் மீது ஏரளாமான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த பெண் ஒருவர் உ.பி.,யை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவரின் குடியுரிமை பறிக்கப்படும். இந்திய குடியுரிமையில் இருந்து காஷ்மீர் குடியுரிமை மாறுபட்டு இருக்கும். தற்போது இந்த தடைகள் நீக்கப்பட்டதால் கட்சியில் உள்ள இஸ்லாமிய தொண்டர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
காஷ்மீரில் உள்ள வெள்ளையான பெண்களை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதால் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்து, முஸ்லிம் என ஒவ்வொருவரும் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த நாடே இதனை கொண்டாடி வருகிறது என்றார்.


latest tamil news


இந்த பேச்சு பற்றி அவரிடம் கேட்டதற்கு, இதில் தவறு ஏதும் இல்லை. இனி யார் வேண்டுமானாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். இது தான் உண்மை. இதைத் தான் நானும் சொன்னேன். இது காஷ்மீர் மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம். இந்த சுதந்திரத்தை கொண்டாடத்தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். காஷ்மீரில் இருக்கும் அனைவரும் அழகானவர்கள் என்பதால் அங்கு வீடு வாங்க நினைக்கிறேன் என்றார்.

விக்ரம் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், நாட்டில் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாக கூறுபவர்கள் தான் நாட்டின் அச்சுறுத்தல். அவர்கள் வீடு மீது குண்டுகளை எறிய வேண்டும் என பேசி பரபரப்பை கிளப்பியவர்.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஆக-201920:45:21 IST Report Abuse
Naushad Babjohn கேவலமான முகத்தை () வெளிபடுத்தியுள்ளான்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
07-ஆக-201920:15:56 IST Report Abuse
Rajagopal காஷ்மீர பெண்களுக்கு இதைக் கேட்டுக் கிலி பிடித்து விட்டது. இப்போதுதான் அப்பாடா, நிம்மதியாக வெளியில் வரலாம் என்று பார்த்தால் பாரதிராசாக்கள் படையெடுத்து வரத் தயாராகி விட்டார்களே என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
Rate this:
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
07-ஆக-201920:13:22 IST Report Abuse
Ramalingam Krishnaswamy இத்தகு ஈன புத்திக்காரனா மக்கள் பிரதிநிதி- வெட்கம் நமக்கும் நம் பாரதத் திருநாட்டிற்கும்- தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசிற்கும் - பா.ஜ கட்சிக்கும். இந்த அறிவிலிமேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுவது உடனடி அவசியத்தேவை. உயரப் பறந்தாலும் கழுகு தரையில் கிடக்கும் அழுகலில் தான் ஆர்வம் கொள்ளும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X