பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,13,14,16 காஞ்சிபுரத்தில் உள்ளூர் விடுமுறை

Updated : ஆக 07, 2019 | Added : ஆக 07, 2019 | கருத்துகள் (12)
Advertisement
அத்திவரதர், காஞ்சிபுரம், உள்ளூர் விடுமுறை

சென்னை: அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆக.,13,14,16 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று(ஆக.,6) மட்டும் அத்திவரதரை சுமார் 3 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். அடுத்து வரும் நாட்களில், கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில், ஆக.,13,14 மற்றும் 16 தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டது. பக்தர்கள் வரும் வாகனங்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். காஞ்சிபுரம் நகராட்சிக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கலெக்டர், எஸ்.பி., விழிப்புடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளை விரைவுபடுத்த, கூடுதல் துப்புரவு பணியாளர்களை, சென்னை மாநகராட்சியிலிருந்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அத்திவரதரை தரிசிக்க இன்று(ஆக.,7) சுமார் 4 லட்சம் பேர் திரண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பக்தர்கள், சுமார் 5.கி.மீ., தூரம் வரை காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-ஆக-201903:39:05 IST Report Abuse
Ranjith Rajan ATHI VARATHAR MADHIRIYE VERA SILAI SEITHU INDHA SILAIYAI KULATHIL VAITHU VIDALAM. ILLAIYENDRAL PERIYA AQUARIUM KALIL ULLATHU POLA KULATHUKKU ADIYIL VAZHI UNDAKKI ANGIRUNDHE MAKKALUKKU KAATCHI THARALAAM. TAMILNAATU THIRUPATHYAGA KONDADA VENDUM.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
07-ஆக-201918:33:33 IST Report Abuse
vnatarajan ஆதி வரதரை திரும்பவும் குலத்திற்கு அனுப்பாமல் கோயிலிலேயே வைத்துவிடலாம். அப்படி செய்வதாக இருந்தால் தற்போது வரும் கூட்டம் குறையும். மேலும் வருகிற நாட்களில் பெரும் கூட்டத்தினால் நெரிசல் ஏற்பட்டு எந்தவிதமான அசம்பாவிதமும் உயிர் சேதம் ஏற்படுவதையிம் தவிர்க்கலாம்.இதைப்பற்றி கோயில் நிர்வாகிகளும், வைஷ்ணவ ஆன்மீகவாதிகளும் நேரத்தை வீணடிக்காமல் உடனே சிந்தித்து செயல்படுவது நல்லது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
07-ஆக-201916:53:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் வேற வேலை என்றால் ............@ கூட்டத்தை போல குண்டு வைக்கவா $$$$$$$$$$ கூட்டத்தைபோல மத பிர(விபச்)ச்சாரம் செய்யவா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X