பொது செய்தி

இந்தியா

சுஷ்மாவின் கடைசி நிமிட நெகிழ்ச்சி

Updated : ஆக 08, 2019 | Added : ஆக 07, 2019 | கருத்துகள் (36)
Advertisement

புதுடில்லி : மாரடைப்பு ஏற்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, ரூ.1 கட்டணத்தை பெற்றுக் கொள்ள இன்று(ஆக.,07) வரும்படி இந்தியா தரப்பு சர்வதேச வழக்கறிஞரிடம் கூறி உள்ளார் சுஷ்மா சுவராஜ்.இந்தியாவிற்காக உளவு பார்த்ததாக, குற்றஞ்சாட்டி, பாக்., ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் குல்பூஷன் ஜாதவ். இவரை மீட்க சர்வதேச கோர்ட்டில் இந்தியா முறையிட்டு, வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இந்தியா சார்பில் ஆஜராகி வாதாடி வருபவர் ஹரிஷ் சால்வி. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் ஹரிசை தொடர்பு கொண்ட சுஷ்மா, குல்பூஷன் வழக்கு விபரம் குறித்து விசாரித்துள்ளார். பிறகு, உங்களின் கட்டணமான ரூ.1 ஐ நாளை (ஆக.,07) மாலை 6 மணிக்கு வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என ஹரிசிடம் சுஷ்மா கூறி உள்ளார்.


இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ், நான் இரவு 8.50 மணிக்கு சுஷ்மாவிடம் பேசினேன். மிகவும் உணர்சிபூர்வமான உரையாடல் அது. நீங்கள் வந்து என்னை சந்தியுங்கள் என என்னிடம் கூறினார். இந்த வழக்கில் நீங்கள் வெற்றி பெற்றதற்காக நான் உங்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.1 ஐ தர வேண்டும்.


அந்த மதிப்பு மிக்க கட்டணத்தை நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என அவரிடம் கூறினேன். நாளை மாலை 6 மணிக்கு வாருங்கள் என என்னிடம் கூறினார். அவரிடம் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக வந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனேன் என்றார்.
(இந்தியாவுக்காக வாதாடுவதால் பெயருக்கு ரூ.1 மட்டுமே கட்டணமாக பெறுகிறார் சால்வே.)

குல்பூஷன் வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தாமதிக்காமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாக்.,க்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என அப்போது சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஆக-201901:19:16 IST Report Abuse
Chinnappa Pothiraj மிகவும் உன்னதமான நேர்மையான மனிதாபிமான,இரக்ககுணம் மிகுந்த பொறுப்புடனும் தன் கடமையை மிகமிக நேர்த்தியான முறையில் கையாள்வதும், பிற நாடுகளில் நம் நாட்டின் பெருமையை உணர்த்தியவர்.அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும்,அவர்களது ஆன்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
08-ஆக-201902:49:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்த நிமிஷம்வரை நான் இன்னம் நார்மலுக்கு வரலே மனத்துளே சுஷிமாஜியே தான் புன்னகையுடன் நிற்கிறார் மறக்கவேமுடியாத என் இனிய சகோதரி இவர் என்பேன் கண்களில் கண்ணீர் கசிஞ்சுண்டேஇருக்கே , இந்த கிழவிக்கு இன்னம் எவ்ளோ வருஷன்களோ இறைவன் போட்டுருக்கார் தெரியலே ,தர்மராஜா உமக்கும் நேர்மையான ஆள் வேண்டும் என்று அழைச்சுண்டுபோயிட்டியா தோன்றிற் புகழுடன் தோன்றுக இல்லேன்னா தோன்றாமை நன்று
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
07-ஆக-201921:45:28 IST Report Abuse
Rajesh ஒரே களங்கம், ரெட்டி சகோதரர்களுடன் அவர்களுடைய திருட்டு பணத்தில், கர்நாடகாவில் போட்டியிட்டு ஜெயித்தது. இது தவறில்லையென்றால் அவர் நல்லவர்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X