பொது செய்தி

இந்தியா

சுஷ்மாவுக்கு அமெரிக்கா, சீனா புகழாரம்

Updated : ஆக 07, 2019 | Added : ஆக 07, 2019 | கருத்துகள் (13)
Advertisement
SushmaSwarajji, SushmaSawraj, us, america, china, சுஷ்மா, சுஷ்மா சுவராஜ், அமெரிக்கா, சீனா, தலாய்லாமா

புதுடில்லி: மாரடைப்பால், உயிரிழந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு, சீனா, அமெரிக்கா நாட்டு தூதர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கை: உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவின் தூதராக சுஷ்மா சுவராஜ் பார்க்கப்பட்டார். அனைவராலும் மதிக்கப்பட்டார். வெளியுறவு அமைச்சராக, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். 2019 ல், இரு நாட்டு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சிறப்பாக நடத்தினார்.






சீன தூதர் சன் வெயிடோங்: இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா காலமான செய்தி வருத்தம் அளிக்கிறது. இந்தியா சீனா இடையிலான உறவுக்கு அவர் அளித்த பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஜப்பான் தூதர் கென்ஜி ஹிரமட்சு: இந்திய வெளியுறவு முன்னாள் அமைச்சர் சுஷ்மா மறைவு செய்தி வருத்தம் அளிக்கிறது. ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பாக, அவரது குடும்பத்திற்கும், இந்திய மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.





புத்த மத தலைவர் தலாய் லாமா: இந்த கடினமான நேரத்தில், எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பொது மக்களிடம் நட்புடன் நடந்து கொள்வதிலும், அக்கறை செலுத்தியதிலும் அனைவராலும் மதிக்கப்பெறறார். மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை சேவையாக மாற்றினார். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-201903:35:13 IST Report Abuse
J.V. Iyer நல்லவர்களை ஏன் கடவுள் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்கிறார்? முன்பு பிரமோத் மகாஜன் , மனோகர் பாரிக்கர், இப்போ சுஷ்மா. இந்தியாவின் பேரிழப்பு.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஆக-201903:33:18 IST Report Abuse
J.V. Iyer சுஷ்மா போன்ற பெண் அரசியல் வாதிகளால் இந்தியா மிகவும் பெருமை அடைகிறது.
Rate this:
Share this comment
Cancel
v.s.raj - COIMBATORE,இந்தியா
07-ஆக-201921:06:51 IST Report Abuse
v.s.raj மனித நேயம் மிக்க பாரத பெண்மணி. அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை "பாரத ரத்னா விருது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X