ஹபீஸ் குற்றவாளி: கோர்ட் தீர்ப்பு

Updated : ஆக 07, 2019 | Added : ஆக 07, 2019 | கருத்துகள் (25)
Advertisement
UN,terrorist, Hafiz Saeed, guilty, ஹபீஸ் சயீத, பயங்கரவாதி, பாகிஸ்தான்,குற்றவாளி

இஸ்லாமாபாத்: ஐ.நா.,வால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளி என பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு, பாகிஸ்தானில் உள்ள குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட, காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சயீதை, கடந்த ஜூலை 17 ம் தேதி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர், கடந்த ஜூலை 24ம் தேதி அவரின் நீதிமன்ற காவல், 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்றைக்குள்(ஆக.,7) ஹபீஸ் மீது முழுமையான குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும்படி பயங்கரவாத தடுப்புபிரிவுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.






கடந்த ஜூலை 3 ம் தேதி, ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீது, நயீப் எமீர் அப்துல் ரெஹ்மான் உள்ளிட்ட 13 முக்கய நபர்களை, பண மோசடி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக, பயங்கரவாததடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அவர்கள், தொண்டு நிறுவனம் துவக்கி, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக குற்றஞ்சாட்டிய போலீசார், 5 நகரங்களில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
08-ஆக-201912:11:03 IST Report Abuse
Sridhar இவன் நல்லவனா கெட்டவனா?
Rate this:
Share this comment
Cancel
Raja - Chennai,இந்தியா
08-ஆக-201908:29:15 IST Report Abuse
Raja பாஸ்.. உங்க தல மேல யாரோ குத்த வச்சு உக்காந்து இருக்காங்க..
Rate this:
Share this comment
Cancel
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
08-ஆக-201901:43:03 IST Report Abuse
Kunjumani எப்பா ஆள பார்த்தால் ஒரு முழு மாட்டையும் முழுங்கிவிட்டு கூடவே முழு ஆட்டையும் இலவச இணைப்பாக கேட்பான் போலிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X