பதிவு செய்த நாள் :
பிரிவு 370: இரண்டே குடும்பங்களுக்கு தான் பாதிப்பு
லடாக், எம்.பி., ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் சரவெடி பேச்சு

புதுடில்லி : அரசியல் அமைப்பு சட்டத்தின், 370-வது பிரிவை மாற்றி அமைப்பது பற்றி, லோக்சபாவில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின் போது, பா.ஜ.,வை சேர்ந்த, லடாக் தொகுதி, எம்.பி., ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யாலின் சரவெடி பேச்சு, தொடர் கரகோஷங்களையும், பிரதமரின் பாராட்டையும் பெற்றது.

லடாக், காஷ்மீர், 370 பிரிவு, பாதிப்பு,எம்.பி


இதுவரை அதிகம் வெளிப்படாத, லடாக் மக்களின் விருப்பங்கள் மற்றும் குறைகள் பற்றி, ஜாம்யாங் எடுத்துரைத்தார். அவருடைய உரை: இன்றைய தினம், மறைந்த பிரதமர், ஜவஹர்லால் நேருவின் தலைமையில், காங்கிரஸ் செய்த தவறை, நாம் திருத்த உள்ளோம்.

71 ஆண்டுகள்


கடந்த சில தினங்களாக நடந்த விவாதத்தில், லடாக்கின் பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், லடாக்கை பற்றி பேசுபவர்கள் யாருக்காவது, உண்மையிலேயே லடாக்கை பற்றி தெரியுமா? எங்களை, 71 ஆண்டுகளாக கண்டு கொள்ளாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். இதே அவையில் தான், 'லடாக் புல் கூட முளைக்காத பஞ்சப் பிரதேசம்' என, காங்கிரசார் முன்பு வர்ணித்து உள்ளனர்.

ஏதோ புத்தகத்தில் படித்ததை வைத்து, எங்களை பற்றி எல்லாமும் தெரிந்தது போல் பேசுகின்றனர். கடந்த, 71 ஆண்டுகளாக, லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவிக்கக் கோரி, லடாக் மக்கள் போராடி வருகின்றனர். நாங்கள் பாரதத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக விரும்பினோம்.

'எங்களை, நேரடி மத்திய அரசு ஆட்சியின் கீழ் கொண்டு வாருங்கள் அல்லது பஞ்சாப் மாநிலத்தோடாவது இணைத்து விடுங்கள். 'ஆனால், எக்காரணம் கொண்டும், காஷ்மீருடன் இணைத்துவிடாதீர்கள்' என, 1948ல், லடாக் பவுத சங்கத்தின் தலைவர் (லடாக் பவுத பெரும்பான்மை பிரதேசம்), முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கோரிக்கை விடுத்தார்.

காங்., பொறுப்பு


ஆனால், அப்போதைய மத்திய அரசு, இந்த கோரிக்கை புரிந்து கொள்வதற்கு கூட முயற்சி எடுக்கவில்லை. காஷ்மீரின் கீழ், இன்று வரை, எங்கள் முன்னேற்றம், அரசியல் விருப்பங்கள், அடையாளம், மொழி என, அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளது என்றால், இதற்கு பிரிவு, 370 மற்றும் காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பு.


லடாக் மக்களின் உண்மையான தலைவர்கள், 'எப்போதுமே பாரதத்துடன் இணைந்திருக்க வேண்டும்; பாரதத்திற்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்' என்றே உரைத்து வந்துள்ளனர். நீங்கள், பாரதம் ஈடுபட்ட எந்த ஒரு போரிலும் பாருங்கள்; லடாக் மக்கள் உயிர் தியாகம் செய்திருப்பார்கள்.


இந்த அவையில், காஷ்மீர், எம்.பி., பிரிவு, 370ஐ மாற்றினால், என்ன இழப்பு ஏற்படும் என்பதை பற்றி பேசினார். உண்மையில் என்ன இழப்பு என்றால், இரண்டு குடும்பங்களின் (மெகபூபா முப்தி மற்றும் ஒமர் அப்துல்லா குடும்பங்கள்) வாழ்வாதாரம் போய்விடும்.

அது தான் ஒரே இழப்பு. இரண்டே குடும்பங்களின் வாழ்வாதார இழப்பிற்கு பரிகாரமாக, மொத்த காஷ்மீரின் எதிர்காலமும் பிரகாசமாகப் போகிறது.


கார்கில் பற்றி தவறான தகவல்கள், இந்த அவையில் போதிக்கப்படுகின்றன (லடாக்கின் இரண்டு மாவட்டங்களில் ஒன்று, கார்கில். இது, முஸ்லிம்கள் பெரும்பான்மை மாவட்டம்). கடந்த, 2014லும் சரி; 2019லும் சரி, எங்கள் தேர்தல் அறிக்கையில், யூனியன் பிரதேச திட்டத்தை முன்வைத்திருந்தோம், கார்கில், லே என, இரு மாவட்டங்களிலுமே, வீடு வீடாக சென்று, இது பற்றி எடுத்துரைத்தோம். இதற்கான ஆதரவு என்பது, இரண்டு முறையுமே சாதனை படைக்கும் வாக்கு வித்தியாசத்தில் நான் ஜெயித்து வந்ததில், நிரூபணமாகிறது.


யூனியன் பிரதேசம்


ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக இருந்த போது, லே வந்திருந்தார். அப்போது, காங்கிரஸ், பி.டி.பி., - என்.சி., - பா.ஜ., என, கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சிகளின் லடாக் தலைவர்களும்; அனைத்து மத அமைப்பு தலைவர்களும் அவரை சந்தித்தோம். எல்லோரும் ஒரே குரலில் கேட்டது ஒன்று தான், 'எங்கள் லடாக்கை யூனியன் பிரதேசமாக்குங்கள்' என்பதே அது.

அவர், 'வேறு என்ன வேண்டும்' எனக் கேட்டார். நாங்கள், 'வேறு ஒன்றும் வேண்டாம், இது தான் வேண்டும்' என்றோம். அன்று எங்களுடன் வந்திருந்த, என்.சி., மற்றும் பி.டி.பி.,யின் மாவட்ட செயலர்களை, காஷ்மீரில் உள்ள அவர்கள் தலைமை, அன்றே பத்திரிகை செய்தி அறிக்கை மூலம், பதவி விலக்கியது.

இவர்கள் தான் இன்று ஜனநாயகத்தை பற்றி பேசுகின்றனர். மாற்று குரல்களை ஒடுக்குவது தான், உங்கள் ஜனநாயகமா? பிரிவு, 370 மாற்றப்பட்டால், காஷ்மீரின் சமத்துவம் சீர்குலைந்துவிடும் என, பேசுகிறார்கள். சமத்துவத்தை பற்றி நான் சொல்கிறேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என, மத்திய அரசிடம் இருந்து நிதி வருகிறது. அதில், லடாக்கிற்கும் பங்கு உண்டு. ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கு எதையும் தராமல், முழு நிதியையும் காஷ்மீருக்கு எடுத்து சென்றீர்களே; இது தான் உங்கள் சமத்துவமா?

ஜம்மு காஷ்மீரில், இரண்டு தலைநகர்கள் உள்ளன (ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு). இரண்டிலுமே தலைமை செயலகம் உள்ளது. அவற்றில், லடாக்கை சேர்ந்த எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்? இது தான் உங்கள் சமத்துவமா? அரசு, 1,000 பணியிடங்களை உருவாக்கினால், அதில், 10 கூட லடாக்கிற்கு தரப்படுவதில்லை. இது தான் உங்கள் சமத்துவமா?

சமத்துவமா?


ஹஸ்னைன் மஸூதி (அனந்தநாக் எம்.பி.,) காஷ்மீரில் பல்கலைகழகங்களை பற்றி பேசினார். கடந்த, 2011ல், காஷ்மீருக்கு மத்திய பல்கலை கழகம் கிடைத்தது. ஜம்முவாசிகளும் சண்டை போட்டு, ஜம்முவிற்கும் ஒரு மத்திய பல்கலையை வாங்கிக்கொண்டனர். லடாக்கில் ஒரு உயர்கல்வி வாய்ப்பு கூட இல்லை என,நாங்களும் போராட்டம் நடத்தினோம். காங்கிரஸ் தந்ததா? இல்லை; பிரதமர் மோடி தான் தந்தார்.


சமத்துவத்தை பற்றி பேசுகிறீர்களே, எங்கள் லடாக்கி மொழியை அங்கீகரித்தீர்களா?காஷ்மீரி மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது; இருப்பினும் அதை அரசு மொழியாக அறிவித்தீர்கள்?

Advertisement

ஜம்முக்காரர்கள் சண்டை பிடிக்கிறார்கள் என, டோக்ரி மொழியையும் சேர்த்துக்கொண்டீர்கள். ஆனால், இன்று வரை, எங்கள் மொழியை அங்கீகரிக்காமல் ஒடுக்கி வைத்துள்ளீர்கள். இது தான் உங்கள் சமத்துவமா? பிரிவு, 370ஐ மாற்றுவதன் மூலம், குறிப்பிட்ட மதத்தினரின் எண்ணிக்கை அதிகரிக்கவும், வேறு மதத்தினரின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது என, பேசுகிறார்கள். இதே, 370ஐ பயன்படுத்தி, இரவோடு இரவாக, காஷ்மீரி பண்டிட்களை விரட்டி அடித்தீர்களே, இது தான் உங்கள் மதசார்பின்மையா?


லடாக்கில், முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பவுதர்களை அழிக்கப் பார்த்தீர்களா இல்லையா? இது தான் உங்கள் மதசார்பின்மையா? ஏதோ தங்கள் கொடி போய்விடும் என, வருத்தப்படுகிறார்கள் (தேசிய கொடி அல்லாது தனி கொடி கொள்கையை, காஷ்மீர் கடைப்பிடித்தது). லடாக்கில், 2011லேயே நாங்கள் அந்த கொடியை துாக்கி எறிந்துவிட்டோம்.


மூவர்ண கொடி


தேசிய கொடியை எங்களுடையதாக்கிக் கொண்டோம்; ஏன்? நாங்கள், இந்தியாவின் பிரிவில்லாத ஓரங்கமாக இருக்க விருப்பப் படுகிறோம். மூன்று வர்ண கொடியை தான் எங்கள் அடையாளமாக கருதுகிறோம். நான் முன்பே குறிப்பிட்ட, இரண்டு குடும்பங்கள் இருக்கின்றனவே. அவர்கள், 'காஷ்மீர் பிரச்னை... காஷ்மீர் பிரச்னை' என்று, எப்போதும் தண்டோரா போடுகிறார்கள். ஆனால், அவர்கள் தான் பிரச்னையே. இன்றும், காஷ்மீர், தங்கள் அப்பன் வீட்டு சொத்து என்று நினைத்திருக்கின்றனர்; அதை எப்படி ஏற்பது?


நான் இந்த அவைக்கும், அரசுக்கும், லடாக் மக்களின் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், 71 ஆண்டுகளில், முதல் முறையாக, லடாக் மக்களின் குரலுக்கு மதிப்புக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் உரையாற்றினார்.


காஷ்மீரின் கீழ், இன்று வரை, எங்கள் முன்னேற்றம், அரசியல் விருப்பங்கள், அடையாளம், மொழி என, அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளது என்றால், இதற்கு பிரிவு, 370 மற்றும் காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பு. லடாக் மக்களின் உண்மையான தலைவர்கள், 'எப்போதுமே பாரதத்துடன் இணைந்திருக்க வேண்டும்; பாரதத்திற்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும், என்றே உரைத்து வந்துள்ளனர்.


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு என, மத்திய அரசிடம் இருந்து நிதி வருகிறது. அதில், லடாக்கிற்கும் பங்கு உண்டு. ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? லடாக்கிற்கு எதையும் தராமல், முழு நிதியையும் காஷ்மீருக்கு எடுத்து சென்றீர்களே; இது தான் உங்கள் சமத்துவமா? ஜம்மு - காஷ்மீரில், இரண்டு தலைநகர்கள் உள்ளன (ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு). இரண்டிலுமே தலைமை செயலகம் உள்ளது. அவற்றில், லடாக்கை சேர்ந்த எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்? இது தான் உங்கள் சமத்துவமா?


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVARAM - Kochi,இந்தியா
11-ஆக-201909:33:00 IST Report Abuse

SIVARAMஇந்த எம்பீ வாயால் வடை சுடுகிறார்

Rate this:
adithyan - chennai,இந்தியா
10-ஆக-201911:54:28 IST Report Abuse

adithyanதமிழ் நாட்டில் இரண்டு குடும்பங்கள் கொள்ளை அடிப்பதுபோல காஷ்மீரிலும் இரண்டு குடும்பங்கள் அதிகாரத்திலும் கொள்ளையிலும். லடாக் மக்களை ஒதுக்கியது பற்றி ஏன் இங்கு சமூக நீதி பெற்றுபவர்கள் வாய் திறக்கவே இல்லை.

Rate this:
bal - chennai,இந்தியா
08-ஆக-201923:20:14 IST Report Abuse

balசரியான செருப்படி கொடுத்தார் திமுக முதுகெலும்புக்கு....முழுவதும் செய்தியாக பரப்புங்கள்...கட்ச தீவு தாரைவார்த்தவர்களுக்கு புரியட்டும்.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X