பதிவு செய்த நாள் :
அரசு மரியாதையுடன் சுஷ்மா
உடல் தகனம்

புதுடில்லி : மறைந்த சுஷ்மா சுவராஜ் உடல், அரசு மரியாதையுடன், நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அமித் ஷா, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி உட்பட பலர் பங்கேற்றனர்.

சுஷ்மா, மாரடைப்பு, தகனம், அரசு மரியாதை, பிரதமர், மலரஞ்சலிடில்லி மாநில, முதல் பெண் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த, பா.ஜ.,வைச் சேர்ந்த, சுஷ்மா சுவராஜ், ௬௭, உடல் நலக் குறைவால், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.


ஜனாதிபதிடில்லியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர், ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர், அமித் ஷா, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி, அக்கட்சியின் செயல் தலைவர், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், நேற்று மரியாதை செலுத்தி, சுஷ்மாவின் கணவர் மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறினர்.


காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ராகுல், அக்கட்சியின் மூத்த தலைவர், சோனியா, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, காங்கிரஸ் மூத்த தலைவர், குலாம் நபி ஆசாத் போன்றோரும், சுஷ்மாவின், உடலுக்கு மரியாதை செலுத்தினர்.


மலரஞ்சலிடில்லியில் உள்ள, பா.ஜ., தலைமையகத்திற்கு, அவரின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு, கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மலரஞ்சலி செலுத்தினர். பின், டில்லி, லோதி சாலையில் உள்ள, மின் தகன மையத்திற்கு, சுஷ்மா உடல் எடுத்து செல்லப்பட்டது. அவரின் மகள் மற்றும் கணவர், இறுதிச் சடங்குகளை செய்தனர். பிரதமர் மோடி மற்றும் அத்வானி முன்னிலையில், முழு அரசு மரியாதையுடன், உடல் தகனம் செய்யப்பட்டது.


சுஷ்மா சுவராஜ் பயோடேட்டாபிறந்தது: 14.02.1952

இடம்: அம்பாலா, ஹரியானா

கணவர்: சுவராஜ் கவுசல், வழக்கறிஞர்

வாரிசு: மகள் பன்சூரி


வகித்த பதவிகள்:* டில்லியின் முதல் பெண் முதல்வர்

* பார்லிமென்டின் முதல் சிறந்த பெண் எம்.பி.,

Advertisement

* லோக்சபா எதிர்க்கட்சி தலைவர்

* வெளியுறவுத்துறை அமைச்சர்

* சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

* பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர்

* தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்

ராஜ்யசபாவில் இரங்கல்:

ராஜ்யசபாவில், சுஷ்மா சுவராஜுக்கு, நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நேற்று காலை, சபை கூடியதும், இரங்கல் தீர்மானத்தை வாசித்த, சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான, வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்த நாடு முன்னேற வேண்டும் என விரும்பிய, உன்னதமான தலைவர், சுஷ்மா. என்னை அவர், 'அண்ணா' என, எப்போதும் அன்புடன் அழைப்பார். ஒவ்வொரு, 'ரக் ஷா பந்தன்' விழாவின் போதும், எனக்கு அவர், 'ராக்கி' கயிறு கட்டுவது வழக்கம். இந்த ஆண்டு எனக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போயிற்று. சிறந்த பேச்சாளரான அவர், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் சிறந்த புலமை பெற்றவர். அவரின் மறைவு, பார்லிமென்டிலும், பார்லிமென்டிற்கு வெளியிலும், அழிக்க முடியாத தடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார். பிரதமர் மோடி உட்பட, அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று, மவுன அஞ்சலி செலுத்தினர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
08-ஆக-201917:49:35 IST Report Abuse

r.sundaramஅவர் பதவிகளை கேட்டு பெற்றதில்லை, கொடுத்த பதவிகளிலும் மிளிராமல் இருந்ததில்லை. மிகச்சிறந்த ஒரு அரசியல்வாதி. அவரது இறப்பு பி ஜெ பிக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை.

Rate this:
Raja - Thoothukudi,இந்தியா
08-ஆக-201913:00:53 IST Report Abuse

Rajaஅற்புதமான நல்லதொரு அரசியல்வாதியை இழந்துவிட்டோம். மனம் கனக்கிறது. பாரதத்தாயின் திருவடியை அடைந்த அவரின் பாதம் பணிகிறேன்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
08-ஆக-201912:37:31 IST Report Abuse

Balajiஇவர் வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டார்.. அதிலும் பாகிஸ்தானில் தவித்த வாய்பேசமுடியாத சிறுமி விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி மீட்டார்.... இவரது ஆன்ம சாந்தியடைய பிராத்திக்கிறேன்.......

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X