பதிவு செய்த நாள் :
35 அமர்வுகளில் 32 மசோதாக்கள்
வெங்கையா நாயுடு பெருமிதம்

புதுடில்லி : ராஜ்யசபா கூட்டத் தொடர், நேற்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, அதன் தலைவர், வெங்கையா நாயுடு, சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இக்கூட்டத்தொடர், கடந்த, 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகவும் சிறப்பாக நடந்துள்ளதாகவும், 35 அமர்வுகளில், 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மசோதா, வெங்கையா, ராஜ்யசபா,அமர்வு,லோக்சபா


ராஜ்யசபா கூட்டத் தொடர், கடந்த மாதம், 20ல் தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. சபை தொடங்கியதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை, 30ல் இருந்து, 33 ஆக உயர்த்தும் மசோதா நிறைவேறியது. இதையடுத்து, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: இக்கூட்டத்தொடர், கடந்த, 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே, சரியான புரிதலோடு, சபை அமைதி யாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடைபெற்றது.

இக்கூட்டத் தொடரில், மொத்தம், 52 அமர்வுகள் நடந்தன. அதில், எதிர்க்கட்சிகளின் அமளியால்,

19 மணி நேரம், 20 நிமிடங்கள் மட்டுமே வீணாகி உள்ளது. மேலும், 35 அமர்வுகளில், 32 மசோதாக்கள், நிறைவேறியுள்ளதால், இத்தொடர், மிகவும் ஆக்கப்பூர்வமானதாக கருதப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். இதையடுத்து, ராஜ்ய சபாவை, அதன் தலைவர் வெங்கையா நாயுடு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ஒத்திவைக்கப்பட்ட மசோதா:


டில்லியில் உள்ள ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவிட அறக்கட்டளையின்,நிரந்தர அறங்காவலராக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவரை, அப்பதவியில் இருந்து நீக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில், சமீபத்தில் நிறைவேறியது. இந்நிலையில், ராஜ்யசபாவில் இம்மசோதா, நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டி இருப்பதால், மசோதா தாக்கலை ஒத்திவைக்கும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர், சுஷ்மா சுவராஜின் இறுதி சடங்கு நடக்கும் வேளையில், சபையில் சண்டை வேண்டாம் என, பல தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, இந்த மசோதா, அடுத்த கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

லோக்சபாவிலும் சாதனை:

கடந்த, 67 ஆண்டு கால வரலாற்றில், முதன்முறையாக, ஒரே கூட்டத்தொடரில், அதிக எண்ணிக்கையிலான மசோதாக்களை நிறைவேற்றியும், அதிக நேரம் அலுவல்களை மேற்கொண்டும், லோக்சபா சாதனை படைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்ற பிறகு நடைபெற்ற பார்லிமென்டின் முதல் கூட்டத்தொடர், நேற்றுடன் முடிவடைந்தது. பட்ஜெட் தாக்கலுக்காக கூடிய இந்த தொடர், திட்டமிட்ட தேதிக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் நிறைவடைய திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்பாக, நேற்று முன்தினமே, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடர், பலவகையில் சாதனைகளை படைத்துள்ளது. மொத்தம், 36 மசோதாக்களை நிறைவேற்றப்பட்டுள்ளன. 1952க்கு பின், இந்த கூட்டத்தொடரில் தான், அதிக அளவிலான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீண்டகாலமாக இழுபறியிலிருந்த, முத்தலாக் மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா ஆகியவற்றை நிறைவேற்றி, சரித்திர சாதனையை, இக்கூட்டத் தொடர் படைத்துள்ளது. டி.என்.ஏ., மசோதா, பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த மசோதா, சிட் பண்ட் திருத்த மசோதா ஆகிய மூன்றை மட்டும் தான், நிறைவேற்ற முடியவில்லை. இந்த லோக்சபாவில், 265 பேர், புதிய, எம்.பி.,க்கள்; இவர்களில், 229 பேர் விவாதங்களில் பங்கேற்று பேசியுள்ளனர். பெண், எம்.பி.,க்கள், மொத்தம், 46 பேர்; இவர்களில், 42 பேர், சபை நடவடிக்கைகளில் பங்கேற்று பேசியதும் அரங்கேறியுள்ளது. லோக்சபாவில், மொத்தம், 281 மணி நேரம் அலுவல்கள் நடைபெற்றுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
08-ஆக-201910:19:27 IST Report Abuse

Girijaசபாஷ் மோடி எம் பி க்கள் இப்போதுதான் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்த்திருக்கின்றனர். இது தொடர வேண்டும், வருடத்திற்க்கு இருநூறு நாளாவது பார்லிமென்ட் நடக்கவேண்டும் எம் பி க்கள் வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யவேண்டும்.

Rate this:
blocked user - blocked,மயோட்
08-ஆக-201905:02:46 IST Report Abuse

blocked userஅசுர பலமுள்ள அரசால் இதுபோல நிறைய நன்மைகள் செய்யமுடியும். அமளி செய்ய இனி காங்கிரஸ் கூட்டம் பயப்படும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X