அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
திராவிட கட்சிகளை ஓரங்கட்ட
ரஜினிக்கு வலை விரிக்கும் கமல்

சென்னை : தேர்தலில், திராவிட கட்சிகளை ஓரம் கட்டுவதற்காக, ரஜினியுடன் கைகோர்க்க, மக்கள் நீதி மையத் தலைவர், கமல் தயாராகி வருகிறார்.

ரஜினி, கமல், வலை, திராவிட கட்சி,   லோக்சபா,கூட்டணி


மக்கள் நீதி மையம் கட்சியை துவக்கிய, நடிகர் கமல், லோக்சபா தேர்தலில், துக்கடா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தார். சென்னையில் மட்டும், ஓரளவு கணிசமான ஓட்டுகளை பெற்றார்;

மற்ற தொகுதியில், 'டிபாசிட்' பெறவே, கடுமையாக போராட வேண்டி இருந்தது. இந்நிலையில், வேலுார் லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை. அடுத்து வரும், சட்டசபை தேர்தலுக்காக, கட்சியை பலப்படுத்தும் பணிகளில், கமல் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், 'பிக்பாஸ்' என்ற, 'டிவி'தொடரில் பேசிய கமல், 'மக்களின் நலனுக்காக, ரஜினியுடனும் கூட்டணி சேரத் தயார்' என்றார்.

லோக்சபா தேர்தல் தோல்வியில், பாடம் கற்ற கமல், திராவிட கட்சிகளை, சட்டசபை தேர்தலில் எதிர்க்க, வலுவான கூட்டணி தேவை என, உணர்ந்துள்ளார். தமிழகத்தில் மற்ற கட்சிகள் அனைத்தும்,திராவிட கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்துள்ளன.

Advertisement

. ரஜினி கட்சியை ஆரம்பித்தால், சட்டசபை தேர்தலில், கமல், அவருடன் நிச்சயம் கூட்டணி அமைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி, உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகளின் பலத்தை அதிகப்படுத்தி வரும் ரஜினியை, தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ.,வும் தீவிரமாக முயன்று வருகிறது.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MSR - Blr,இந்தியா
08-ஆக-201920:41:35 IST Report Abuse

MSRசினிமா கவர்ச்சியில் இருந்து வெளிப்பட வேண்டும் தமிழர்கள். அதே சமயம் போராளிகள் பக்கம் சாயாமல் இருத்தல் அவசியம். இது இரண்டாலும் எந்த நன்மையையும் அடைய போவதில்லை.

Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
08-ஆக-201916:40:30 IST Report Abuse

முதல் தமிழன்Waste fellow Rajini. No guys, selfish guy.

Rate this:
Ashanmugam - kuppamma,இந்தியா
08-ஆக-201916:05:51 IST Report Abuse

Ashanmugamரஜினி மனசு வைத்திருந்தால் எஜமான் படம் வெளி வந்த நேரம் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கலாம். ஒரு முறை மூப்பனார் தமிழக முதல்வராக தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்தார். அதனை மதிக்காமல் புறம்பாக உதாசீனம் பண்ணி விட்டு, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல், இமயமலையில் உட்கார்ந்து விட்டார். இனி கனவு கண்டாலும் தமிழக முதல்வராக முடியாது. ஆண்டவன் ஒரு முறை கொடுத்த வாய்ப்பை தவற விட்ட ரஜினிக்கு இனி சினிமா துறைதான் கதி.

Rate this:
VELAN S - Chennai,இந்தியா
08-ஆக-201923:06:20 IST Report Abuse

VELAN Sர ஜினி மனசு வைத்திருந்தால் எஜமான் படம் வெளி வந்த நேரம் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்ந்திருக்கலாம் என்று நீங்கள் சொல்வதிலிருந்தே தெரிகிறது , தமிழன் எவ்வளவு மானம் கெட்டவன் தரம் தாழ்ந்தவன் ,நடிகரின் பின்னால் நாய் மாதிரி நக்கி கொண்டு போக கூடியவன் என்று . என்றாவது நீங்கள் தமிழன் இப்படி புறம்போக்கா இருக்கானே , அதை நாம் திருத்த வேண்டாமா என்று நினைத்து பார்த்திருக்கிறீர்களா . முதலில் ஒவ்வொரு தமிழனும் ,மானத்தோடு வாழ நீங்கள் சொல்லி கொடுங்கள் , அல்லாது , ரஜனிக்கு ஜோசியம் சொல்லி கொடுப்பதிலே இருக்காதீர்கள் . நன்றி ...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X