'அயோத்தியில் தான் ராமபிரான் பிறந்தார்!'

Updated : ஆக 08, 2019 | Added : ஆக 08, 2019 | கருத்துகள் (36)
Advertisement

புதுடில்லி: 'மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை தான், அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதற்கான ஆதாரம்' என, ராம் லல்லா அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.







உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, நேற்று முன்தினம் முதல், தினசரி விசாரிக்கப்படுகிறது.நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, சர்ச்சைக்குரிய நிலம், தங்களுக்கு சொந்தமானது என்றும், அதை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஹிந்து அமைப்பான, நிர்மோஹி அகாடா, வலியுறுத்தியது.

தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், நேற்றும் விசாரணை தொடர்ந்தது.கேள்விஅப்போது, நிர்மோஹி அகாடா அமைப்பு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சுஷில் ஜெயினிடம், 'சர்ச்சைக்குரிய நிலம், உங்கள் வசம் பல ஆண்டுகளாக இருந்ததாக கூறுகிறீர்கள்; இதை உறுதி செய்வதற்கான வருவாய் ஆவணங்களோ அல்லது பிற சான்றுகளோ, உங்களிடம் உள்ளனவா' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, சுஷில் ஜெயின் வாதிட்டதாவது:கால வரையறை சட்டப் பிரிவின் கீழ், இந்த வழக்கை பதிவு செய்துள்ளோம். சம்பந்தபட்ட நிலம், நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது. நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பித்த பின் தான், கால வரையறை துவங்கும்.






தற்போது, நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு உரிமை கொண்டாடுவதற்கு, சட்ட ரீதியாக எங்களுக்கு எந்த தடையும் இல்லை.அப்படியே இருந்தாலும், கால வரையறை சட்டப்படி, 12 ஆண்டுகளுக்குள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை, 1950ல் துவங்கியது. ஆனால், இது தொடர்பாக, 1959ம் ஆண்டிலேயே, வழக்கு தொடர்ந்து விட்டோம். இவ்வாறு, அவர் வாதிட்டார்.


வாதம்:


இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்துள்ள, ராம் லல்லா அமைப்பின் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர். கே.பராசரன் வாதிட்டதாவது: பல நுாறு ஆண்டுகள் கடந்த பின், ராமர், அயோத்தியில் தான் பிறந்தார் என்பதை, எங்களால் எப்படி நிரூபிக்க முடியும். அயோத்தியில் தான், ராமர் பிறந்தார் என்பது, மக்களின் நம்பிக்கை. வால்மீகி ராமாயணத்திலும், இது குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, அயோத்தியில் தான், ராமர் பிறந்தார் என்பதற்கான சான்று. இவ்வாறு, அவர் வாதிட்டார்.

இதையடுத்து, 'ஏசு, பெத்லஹேமில் பிறந்தாரா என்பதில் மாற்றுக் கருத்துடன், உலகில் எங்காவது வழக்கு உள்ளதா' என, அவரிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த, பராசரன், ''இது குறித்து விசாரித்து சொல்கிறேன்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-ஆக-201914:21:52 IST Report Abuse
Nallavan Nallavan நீதிபதிகள் குழுவில் ரஞ்சன் கோகோய் இருப்பதால் ஹிந்துக்கள் ராமஜென்ம பூமியை இஸ்லாமிய அன்பர்களுக்காக நேர்ந்து கொண்டது போல எண்ணிக்கொள்ளுங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-ஆக-201913:15:59 IST Report Abuse
Nallavan Nallavan கேஸை இழுத்தால் நீதிபதிக்கு பல விதங்களில் லாபம் ..... கனகதாரா தோத்திரம் சொல்லவே வேண்டாம் .....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-ஆக-201913:10:25 IST Report Abuse
Nallavan Nallavan மதச் சார்பு இல்லாமல் இக்கருத்தை எழுதுகிறேன் ...... இது போன்ற வழக்குகளில் ஏதாவது ஒரு தரப்பு விட்டுக்கொடுத்தே ஆகவேண்டும் ...... சட்டம் ஒரு கழுதை ....... அதனிடம் தீர்வு கிடைக்காது ....... வழக்கு, வக்கீல் செலவு, வாய்தா, உயிர்ப்பலி, மத அடிப்படைவாதம் என்று பல வேண்டாத விளைவுகளைப் பார்த்துவிட்டது இந்த வழக்கு ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X