அரசியல் செய்தி

தமிழ்நாடு

'முதுகெலும்பு இல்லாதகட்சி தி.மு.க.,' :முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு

Added : ஆக 08, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
திருவள்ளூர் : ''தமிழகம் முழுவதும் நீர் பாதுகாப்பு வாரியம் அமைத்து, அதிகளவில் பெண்களை சேர்த்து, ஒரு வாரம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.குடிமராமத்து பணி, நீர் மேலாண்மை இயக்க பணிகள் துவக்க விழா, திருவள்ளூர் மாவட்டம், பனப்பாக்கம் ஏரியில், நேற்று நடந்தது. இதில், முதல்வர், இ.பி.எஸ்., பங்கேற்று, குடிமராமத்து பணியை
'முதுகெலும்பு இல்லாதகட்சி தி.மு.க.,' :முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு

திருவள்ளூர் : ''தமிழகம் முழுவதும் நீர் பாதுகாப்பு வாரியம் அமைத்து, அதிகளவில் பெண்களை சேர்த்து, ஒரு வாரம் முழுவதும் விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.

குடிமராமத்து பணி, நீர் மேலாண்மை இயக்க பணிகள் துவக்க விழா, திருவள்ளூர் மாவட்டம், பனப்பாக்கம் ஏரியில், நேற்று நடந்தது. இதில், முதல்வர், இ.பி.எஸ்., பங்கேற்று, குடிமராமத்து பணியை துவக்கி வைத்தார்.

பின், மஞ்சங்காரணை அடுத்த, கூரப்பாக்கம் குளத்தை துார் வாரும் பணியை துவக்கி வைத்து, முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:தமிழகத்தில் நீர்வளம் மிகவும் முக்கியமானது. இங்கு ஆண்டு முழுவதும், தண்ணீர் வற்றாத ஆறுகள் எதுவும் இல்லை.பருவமழையை நம்பியே ஆறு, ஏரி,குளம் ஆகியவற்றில் தேங்கும் தண்ணீரை வைத்து தான், விவசாயம் நடக்கிறது.

கடந்த, 30 ஆண்டுகளாக, ஏரி, குளம் துார் வாரப்படவில்லை. இதனால், தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டு, குடிமராமத்து திட்டத்தின் கீழ், நீர்நிலைகளை துார் வாரும் பணி, 2017- - 18 முதல், செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,829 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.மேலும், நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும், 5,000 சிறுபாசன ஏரிகள், 25 ஆயிரம் குளங்கள் துார் வாரி, ஆக்கிரமிப்பு அகற்றி, ஆழப்படுத்தப்படும். இதனால், பருவ மழையால் கிடைக்கும் தண்ணீர் ஒரு சொட்டுகூட வீணாக்காமல் சேமிக்கப்படும்.

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில், நீர் பாதுகாப்பு வாரியம்,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் துவக்கி, அவற்றில் பெருமளவில் பெண்கள் சேர்க்கப்படுவர்.ஒரு வாரம் முழுவதும், இந்த இயக்கம் குறித்து, பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு செய்யப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள், வேலுமணி, பாண்டியராஜன், பெஞ்சமின், தலைமை செயலர், சண்முகம், திருவள்ளூர் கலெக்டர், மகேஸ்வரி உட்பட துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


'முதுகெலும்பு இல்லாதகட்சி தி.மு.க.,'

முதல்வர் மேலும் பேசியதாவது: நீர்நிலைகளை துார் வாரும் பணிகளை, ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன். கட்சத்தீவுவை மீட்க வேண்டும் என, சட்டசபையில் இயற்றிய தீர்மானத்தை எங்களது எம்.பி.,க்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.மக்கள் பிரச்னைக்காக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். ஆனால், தி.மு.க., சுயநலத்திற்காக செயல்படுகிறது. முதுகெலும்பு இல்லாத கட்சி என்றால் அது தி.மு.க., தான்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
08-ஆக-201918:52:42 IST Report Abuse
தமிழ் மைந்தன் திமுகவிற்கு இல்லையென்றால் காங்கிரஸ் கட்சியை இன்றுவரை சுமக்க முடியுமா?........இறக்கிவிட்டால் அஇஅதிமுக சுமக்கும்...ஆனால் திமுக புதைக்கப்பட்டுவிடுமே.... பாலுவை கவனித்தது அன்று அமாவாசை எனவே அவர் எங்காவது வழக்கம்போல் கைவைத்து விடுவார் என்பதால்.......
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
08-ஆக-201915:31:21 IST Report Abuse
Baskar முதுகு எலும்பும் முட்டிகால் இல்லாத கட்சி தி.மு.க தான். அதனால் தான் அடுத்தக்காட்சியினர் முதுகில் ஏறி சவாரிசெய்து கொண்டு இருக்கின்றனர். அதற்க்கு பெயர் தான் ஈயத்தை பார்த்து பித்தளை இளித்ததாம்.
Rate this:
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
08-ஆக-201912:54:25 IST Report Abuse
K.Varadharajulu அதை... சொல்வது தான் வேதனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X