சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'மிமிக்ரி' செய்யும் செயற்கை நுண்ணறிவு!

Added : ஆக 08, 2019
Advertisement
'மிமிக்ரி' செய்யும் செயற்கை நுண்ணறிவு!

'பேஸ்புக்' இப்போது செயற்கை நுண்ணறிவுத் துறையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அண்மையில் அது உருவாக்கியுள்ள, 'மெல்நெட்' என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருள், ஒருவரது குரலைப் போலவே, 'மிமிக்ரி' செய்யும் திறனைக் கொண்டது. செய்முறை விளக்கத்திற்காக, மெல்நெட், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சைப் போலவே பேசிக்காட்டுகிறது.
மனிதக் குரல்களின் நுட்பத்தை பழகுவதற்காக, இணையத்தில் கிடைக்கும் ஆடியோ புக் எனப்படும் ஒலி நுால்கள், டெட் டாக்ஸ் இணையதளத்திலுள்ள 452 மணிநேர உரைகள் போன்றவற்றை வைத்து மெல்நெட் பயிற்சி எடுத்துள்ளது.
இதே பாணியில் உருவாக்கப்பட்ட பிற மிமிக்ரி மென்பொருட்களைப் போல அல்லாமல், மெல்நெட் ஒருவரது பேச்சில் உள்ள அலை வடிவத்தை நுட்பமாக அளந்து கற்றுக்கொள்கிறது. ஒருவரது குரலின் தனித் தன்மைகளை இதன் மூலம் அந்த மென்பொருள் துல்லியமாக அறிந்து கொள்கிறது.
பிரபல விஞ்ஞானிகளான ஸ்டீபன் ஹாக்கிங், ஜேன் குட்டால் போன்றோரின் குரல்களிலும், மெல்நெட் பேசி அசத்துகிறது.
தற்போது பரவலாகிவரும் அமேசானின், அலெக்சா கூகுள் அசிஸ்டென் போன்ற டிஜிட்டல் உதவியாளர்களின் இயந்திரத்தனமான குரல்களை, மேலும் மனிதத் தன்மை உள்ளவையாக மாற்ற மெல்நெட் உதவும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X