சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பெண்களை நிலாவுக்கு அனுப்பும் நாசா!

Added : ஆக 08, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பெண்களை நிலாவுக்கு அனுப்பும் நாசா!

மீண்டும் நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் பந்தயம் துவங்கிவிட்டது.
அமெரிக்காவிலுள்ள தனியார் விண்வெளி அமைப்புகளான, 'ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஆரிஜின்' போன்றவை, புதிய ராக்கெட்டுகளையும், மனிதர்களை தாங்கிச் செல்லும் விண்கலன்களையும் அடுத்த சில ஆண்டுகளில் ஏவத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான, நாசா, 2024ல் நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த முறை போய் காலடி பதித்துவிட்டு வராமல், அங்கேயே தங்கி ஆராயவும் திட்டமிட்டுள்ளது.
இதற்கு, 8 பில்லியன் டாலர்கள் தேவை என, அரசிடம் கேட்டுள்ளது நாசா.
இதற்கு முன்பு நாசா, தன் அப்பல்லோ வரிசை விண்கலன்கள் மூலம், மனிதர்களை நிலாவில் கால் பதிக்க வைத்தது. இந்த முறை, கிரேக்க தொன்மத்தின்படி, அப்பல்லோவின் சகோதரியான, 'ஆர்டிமிஸ்' பெயரை, நிலா திட்டத்திற்கு சூட்டியிருக்கிறது.
ஏனெனில், இந்த முறை விண்வெளி வீராங்கனையரும் நிலாவுக்கு போய் தங்கி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கென முதற்கட்ட நிதியையும் ஒதுக்கி, மீண்டும் அமெரிக்கர்கள் நிலாவுக்குப் போகப் போகின்றனர் என, 'டுவிட்டரில்' அறிவித்திருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஆக-201911:57:21 IST Report Abuse
Nallavan Nallavan அந்த நெலாவத்தான் நா கையில புடிச்சேன் ..... என் ராசாத்திக்காக ......
Rate this:
Share this comment
rajinimurugan - tirunelveli,இந்தியா
11-ஆக-201913:24:43 IST Report Abuse
rajinimuruganஅதோட நிலா நாசமா போயிரும்..நாசாவும் நாசமா போயிரும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X